/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கடை, நிறுவனங்களுக்கு இணையதளம் மூலம் பதிவு சான்று பெற வாய்ப்பு தொழிலாளர் நலத்துறை தகவல்

ADDED : அக் 18, 2024 05:13 AM
சிவகங்கை: மாவட்டத்தில் ஜூலைக்கு பின் திறக்கப்பட்டு, 10 க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுடன் செயல்படும் கடைகள், நிறுவனங்கள் இணையதளம் மூலம் பதிவு செய்ய வேண்டும், என தொழிலாளர் நலத்துறை உதவி கமிஷனர் முத்து தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: மாவட்டத்தில் ஜூலைக்கு பின் புதிதாக கடை மற்றும் நிறுவனங்கள் தொடங்கி, 10 அல்லது அதற்கும் மேற்பட்ட ஊழியர்களை கொண்டு நடைபெறும் கடைகள், நிறுவன உரிமையாளர்கள் தங்கள் நிறுவனத்தை இணையதளம் மூலம் பதிவு செய்ய வேண்டும். இதற்காக தொழிலாளர் நலத்துறை இணைய தளமான https://labour.tn.gov.inல் அதற்கான விண்ணப்பத்தில் பதிவு கட்டணமாக ரூ.100 செலுத்தி கடை, நிறுவனம் துவக்கிய 6 மாதத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பம் பெற்ற ஒரு நாளுக்குள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். அதற்கு பின் பதிவு சான்று வழங்கப்படாவிட்டால், அப்பதிவு தானாக அங்கீகரிக்கப்பட்டதாக கருதப்படும். இந்த ஆண்டு ஜூலை க்கு முன் கடை, நிறுவனம் தொடங்கி 10 அல்லது அதற்கு மேல் ஊழியர்களை நியமித்து தற்போது இயங்கும் நிறுவனங்ளக் பதிவு கட்டணம் ஏதுமின்றி, 2025 ஜூலை 1க்குள் பதிவு செய்து கொள்ளலாம்.
இந்த விண்ணப்பத்தை சரிபார்த்த பின் இணையதளம் மூலம் பதிவு சான்று வழங்கப்படும். பதிவு சான்றிதழில் திருத்தம் செய்யவும் விண்ணப்பிக்கலாம். இந்த வழிமுறைகளை பின்பற்றி, கடை, நிறுவன உரிமையாளர்கள் பயன்பெறலாம், என்றார்.