/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பம்ப் செட் பொருத்தி தண்ணீர் எடுப்பதால் தட்டுப்பாடு
/
பம்ப் செட் பொருத்தி தண்ணீர் எடுப்பதால் தட்டுப்பாடு
பம்ப் செட் பொருத்தி தண்ணீர் எடுப்பதால் தட்டுப்பாடு
பம்ப் செட் பொருத்தி தண்ணீர் எடுப்பதால் தட்டுப்பாடு
ADDED : பிப் 07, 2024 12:13 AM
மானாமதுரை : மானாமதுரை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குடிநீர் குழாய்களில் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் மின் மோட்டார்களை பொருத்தி குடிநீர் எடுப்பதால் அருகில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் வராமல் தண்ணீர் பிரச்னை ஏற்பட்டுள்ளது.
மானாமதுரை நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளிலும் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு குடிநீர் இணைப்பு மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ராஜகம்பீரம் வைகை ஆற்றுப்பகுதியில் இதற்காக போர்வெல் அமைக்கப்பட்டுள்ளது.
பழைய தபால் ஆபீஸ் தெரு, மாரியம்மன் கோவில் தெரு, காளையார் கோவில் ரஸ்தா,பட்டரை தெரு,தெற்கு ரத வீதி,மேற்குரத வீதி,மெயின் பஜார்,ரயில்வே காலனி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சில வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் மின் மோட்டார் களை குழாய்களில் பொருத்தி சிலர் குடிநீரை எடுப்பதால் அப்பகுதியில் உள்ள மற்ற இணைப்புகளுக்கு குடிநீர் வருவதில்லை.
குடிநீர் கிடைக்காமல் வண்டிகளில் வரும் குடிநீரை ரூபாய் 15 கொடுத்து வாங்கும் நிலையில் உள்ளனர். பொதுமக்கள் சிலர் கூறுகையில், மானாமதுரை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குடிநீர் குழாய்களில் தண்ணீர் வரும் நேரத்தில் சட்ட விரோதமாக மின்மோட்டாரை பொருத்தி குடிநீரை எடுப்பதால் அருகில் உள்ளவர்களுக்கு குடிநீர் வராமல் உள்ளது.
இப்பிரச்னை நீண்ட நாட்களாக நடந்து வருகிறது. ஆகவே நகராட்சி நிர்வாகத்தினர் பொதுமக்களின் நலன் கருதி குடிநீர் வரும் நேரங்களில் சோதனைக்குச் சென்று மின் மோட்டார்களை பொருத்தி குடிநீர் எடுப்பவர்களின் இணைப்புகளை துண்டிக்க வேண்டும் என்றனர்.

