/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பஸ் ஸ்டாண்டில் குடிநீருக்கு தட்டுப்பாடு
/
பஸ் ஸ்டாண்டில் குடிநீருக்கு தட்டுப்பாடு
ADDED : மார் 18, 2025 05:55 AM
திருப்புத்துார்: திருப்புத்துார் பஸ் ஸ்டாண்டில் கோடை காலத்தை முன்னிட்டு கூடுதல் குடிநீர் வசதி ஏற்படுத்த பொதுமக்கள் கோரியுள்ளனர்.
திருப்புத்துார் பஸ் ஸ்டாண்டில் மூன்று வரிசையில் பஸ் நிறுத்தங்களுடன் வணிக வளாகங்கள் உள்ளன. அதில் ஒரு கட்டடத்தில் மட்டும் குடிநீர் வசதி உள்ளது. இதுவும் சில நேரங்களில் பற்றாக்குறையாக உள்ளது.
தற்போது கோடை துவங்கியுள்ளதை அடுத்து பயணிகளுக்கு கூடுதல் குடிநீர் வசதி ஏற்படுத்த பேரூராட்சியை கோரியுள்ளனர்.
பேரூராட்சி தரப்பில் கூறுகையில் 'தேவையான இடங்களில் கூடுதல் குடிநீர் வசதி ஏற்படுத்தப்படும்' என்றனர்.ஒவ்வொரு கட்டட வரிசைக்கும் தனியாக இயந்திரம் மூலம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி ஏற்படுத்தவும், தொடர் பராமரிப்பில் வைத்திருக்கவும் பயணிகள் கோரியுள்ளனர்.