/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பற்றாக்குறை வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் ஊழியர்கள் ஆர்.சி., புக், லைசென்ஸ் கிடைப்பது தாமதமாகிறது
/
பற்றாக்குறை வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் ஊழியர்கள் ஆர்.சி., புக், லைசென்ஸ் கிடைப்பது தாமதமாகிறது
பற்றாக்குறை வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் ஊழியர்கள் ஆர்.சி., புக், லைசென்ஸ் கிடைப்பது தாமதமாகிறது
பற்றாக்குறை வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் ஊழியர்கள் ஆர்.சி., புக், லைசென்ஸ் கிடைப்பது தாமதமாகிறது
ADDED : அக் 11, 2024 05:10 AM
காரைக்குடி: காரைக்குடி மோட்டார் வாகன ஆய்வாளர் பகுதி அலுவலகத்தில் நிலவும் ஊழியர்கள் பற்றாக்குறையால் ஆர்.சி., புக், லைசென்ஸ் கிடைக்காமல் ஒரு மாதத்திற்கும் மேல் காத்திருக்க வேண்டிய நிலை இருப்பதாக வாகன ஓட்டிகள் புலம்புகின்றனர்.
காரைக்குடியில் திருச்சி ராமேஸ்வரம் நெடுஞ்சாலை அருகே புதிதாக ரூ.1.93 கோடி செலவில் கட்டப்பட்ட மோட்டார் வாகன ஆய்வாளர் புதிய அலுவலகம் செயல்படுகிறது. காரைக்குடியில் மோட்டார் வாகன ஆய்வாளர் பகுதி அலுவலகம் தொடங்கியது முதல் தற்போது வரை 1 லட்சத்து 90 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைக்குகளும் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கார்கள் மற்றும் ஆட்டோ, ஆம்புலன்ஸ் டிராக்டர் உட்பட,2 லட்சத்து 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தவிர தினமும் புதிய லைசென்ஸ் பெறுவதற்கும் லைசென்ஸ் புதுப்பிப்பிற்கும், வாகன பதிவிற்காகவும் 100க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். இந்நிலையில், லைசென்ஸ். ஆர்.சி., புக் உட்பட பல்வேறு பணிகளையும் தற்காலிக பணியாளர்கள் செய்து வந்தனர். கடந்த சில மாதத்திற்கு முன்பு பணியில் இருந்த இரண்டு பணியாளர்களும் பணியில் இருந்து நிறுத்தப்பட்டனர். தொடர்ந்து புதிதாக ஒரே ஒரு பணியாளர் மட்டுமே பணியில் உள்ளார். இவர், புகைப்படம் எடுப்பது, புதிய கார்டு தயார் செய்து கொடுப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ள வேண்டும். புதிதாக சேர்க்கப்பட்ட பணியாளர் என்பதால் பணிகளை மேற்கொள்வதில் தாமதம் ஏற்படுவதோடு, இருவர் பணி செய்த இடத்தில் ஒருவர் மட்டுமே உள்ளதால் பணிகள் முற்றிலும் முடங்கி கிடக்கிறது. இதனால் லைசென்ஸ் புதுப்பிப்பு, புதிய லைசென்ஸ், ஆர்.சி., புக், உட்பட பலவும் கிடைக்காமல் வாகன ஓட்டிகள் திணறி வருகின்றனர், முறையாக பணியாளர்களை நியமித்து உடனடியாக ஆர்.சி., புக், லைசென்ஸ் உள்ளிட்டவை ம கிடைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
மோட்டார் வாகன ஆய்வாளர் விஜயகுமார் கூறுகையில்:
ஊழியர்கள் இல்லாமல் இருந்ததால் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டது. தற்போது புதிதாக ஊழியர் நியமிக்கப்பட்டுள்ளார். ஆர்சி புக், லைசென்ஸ் உள்ளிட்டவை அனுப்பும் பணி துரிதமாக நடந்து வருகிறது. மீதமுள்ள இடத்திற்கும் ஆட்களை நியமிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள். தாமதமின்றி பணிகள் நடைபெறும்.

