/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தட்டுப்பாடு மானாமதுரையில் புதிய மின் மீட்டருக்கு மாதக்கணக்கில் காத்திருக்கும் மக்கள்
/
தட்டுப்பாடு மானாமதுரையில் புதிய மின் மீட்டருக்கு மாதக்கணக்கில் காத்திருக்கும் மக்கள்
தட்டுப்பாடு மானாமதுரையில் புதிய மின் மீட்டருக்கு மாதக்கணக்கில் காத்திருக்கும் மக்கள்
தட்டுப்பாடு மானாமதுரையில் புதிய மின் மீட்டருக்கு மாதக்கணக்கில் காத்திருக்கும் மக்கள்
ADDED : அக் 22, 2024 05:04 AM
மானாமதுரை: மானாமதுரை சுற்று வட்டார பகுதிகளில் புதிய மின் மீட்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மின் இணைப்பு வேண்டி மக்கள் மாதக்கணக்கில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
மானாமதுரை சுற்று வட்டார பகுதிகளில் உள்ளவர்கள் புதிதாக வீடு மற்றும் வர்த்தக நிறுவனங்கள் கட்டுபவர்கள் மின் இணைப்பு வேண்டி சிப்காட்டில் உள்ள துணை மின் நிலையத்தில் பதிவு செய்து வருகின்றனர். அவர்களுக்கு ஒரு மாதத்திற்குள் மின் இணைப்பு வழங்க வேண்டும். ஆனால் கடந்த சில மாதங்களாக மின் மீட்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் 2லிருந்து 3மாதங்கள் வரை பொதுமக்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே மின் இணைப்பு பெற்றவர்களின் வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களின் மின் மீட்டர்கள் பழுது ஏற்பட்டுள்ள நிலையில் அவற்றை மாற்றுவதற்கும் மாதக்கணக்கில் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
பொதுமக்கள் சிலர் கூறியதாவது: புதிதாக மின் இணைப்பு கேட்டு பதிவு செய்து மாதக்கணக்கில் ஆனாலும் மின் மீட்டர் இல்லாமல் இணைப்பு கொடுக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டால் மின்மீட்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மின் இணைப்பு கொடுப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
மானாமதுரை மின் உதவி செயற்பொறியாளர் சவுந்தர பாண்டியன் கூறியதாவது, மானாமதுரை சுற்று வட்டார பகுதிகளில் மின் மீட்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது குறித்து
உயரதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் மின் மீட்டர்கள் வரவுள்ளன.வந்தவுடன் மின் இணைப்பு கொடுக்கப்படும் என்றார்.