ADDED : டிச 17, 2025 05:33 AM
தேவகோட்டை: காரைக்குடி நெசவாளர் காலனியில் முறைகேடாக வழங்கப்பட்ட பட்டாக்களை ரத்து செய்ய வலியுறுத்தி தேவகோட்டை சப் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
காரைக்குடி நெசவாளர் காலனியில் வசிக்கும் மக்களுக்காக நிலத்தை அரசு ஒதுக்கீடு செய்து 108 பேருக்கு பட்டா வழங்கியது. நெசவாளர் காலனியில் அரசு அதிகாரிகள் ஆய்வு செய்து முறைகேடாக பட்டா பெற்றுள்ளதை ரத்து செய்ய வலியுறுத்தி இந்திய கம்யூ. கட்சியினர் நேற்று சாக்கோட்டை ஒன்றிய செயலாளர் பாண்டிமீனாள் தலைமையில் முற்றுகையிட்டனர்.
மாவட்ட செயலாளர் சாத்தையா, விவசாய பிரிவு மாவட்ட செயலாளர் காமராஜ், மாவட்ட நிர்வாகிகள் ராஜா, மணவழகன், மாரி நகர செயலாளர் சுப்பையா, அன்னபூரணி, வடிவேல் முருகன் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். சப் கலெக்டர் வெளியூர் சென்றிருந்ததால், போலீசார் உள்ளே அனுமதிக்காததால், கட்சியினர் சப் கலெக்டர் வரும் வரை அலுவலகம் முன்பு ரோட்டில் அமர்ந்திருந்து சப் கலெக்டர் வந்தவுடன் அவரிடம் முறையிட்டனர்.

