/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ஊராட்சியை தரம் உயர்த்த கையெழுத்து இயக்கம்
/
ஊராட்சியை தரம் உயர்த்த கையெழுத்து இயக்கம்
ADDED : நவ 19, 2024 05:21 AM
சிவகங்கை: காளையார்கோவில் ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயர்த்தி அறிவிக்ககோரி தமிழக அரசை வலியுறுத்தி நகர் வணிகர் சங்கம் சார்பில் கையெழுத்து இயக்கம் நடந்தது.
சிவகங்கை தெற்கு மாவட்ட வணிகர் சங்க தலைவர் கஸ்பார் தலைமை வகித்தார். ஒன்றிய தலைவர் சிவ கணேசன் வரவேற்றார். எம்.எல்.ஏ., செந்தில்நாதன் கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தார். மாநில இணைச் செயலாளர் குழந்தை தாஸ், தெற்கு மாவட்ட செயலாளர் பழனிகுமார், மாவட்ட ரியல் எஸ்டேட் பிரிவு தலைவர் அங்குச்சாமி, மாவட்ட நிர்வாக குழு தலைவர் பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். மாவட்ட வணிகர் சங்க கவுரவத்தலைவர் ராமச்சந்திரன், யாதவ சங்க தலைவர் அங்குச்சாமி, பார்க்கவ குல சங்க தலைவர் விஸ்வநாதன், மாமன்னர் மருது பாண்டியர் அறக்கட்டளை தலைவர் நாகராஜன், வணிகர் சங்க சட்ட ஆலோசகர் நற்கீரன் கலந்துகொண்டனர்.