ADDED : ஜன 03, 2026 06:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புத்துார்: அரளிக்கோட்டையில் கருத்தான் -கருப்பாயி அம்மாள் அறக்கட்டளை சார்பில் சிலம்ப தலைமை பயிற்சி முகாம் அரளிக்கோட்டையில் நடந்தது.
15 மாவட்டங்களைச் சேர்ந்த சிலம்பாட்ட தலைமை ஆசான்களும், பயிற்றுநர்களும் பங்கேற்றனர். சிலம்பு முறைகளை மாணவர்களுக்கு செயல்விளக்கம் அளித்தனர்.
விருதுநகர் மாவட்ட தலைமை ஆசான் சேவுக பாண்டியன் பயிற்சி, ஆலோசனைகளை வழங்கினார். பயிற்சி அளித்த ஆசான்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
முகாமை பாலமுருகன், முத்துப்பாண்டி, ஆனந்தகுமார், ராமபாலன், முத்துமேனகா, செல்லத்துரை மற்றும் கிராமத்தினர் ஒருங்கிணைத்தனர்.

