/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
காக்கும் கரங்கள் திட்டம் 20 பேருக்கு ரூ.3.43 கோடி
/
காக்கும் கரங்கள் திட்டம் 20 பேருக்கு ரூ.3.43 கோடி
காக்கும் கரங்கள் திட்டம் 20 பேருக்கு ரூ.3.43 கோடி
காக்கும் கரங்கள் திட்டம் 20 பேருக்கு ரூ.3.43 கோடி
ADDED : ஜன 03, 2026 06:18 AM
சிவகங்கை: முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தின் கீழ் சிவகங்கை மாவட்டத்தில் முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் பல்வேறு தொழில் தொடங்கிடும் வகையில் வங்கி மூலம் ரூ.1 கோடி வரை கடன் பெற வழி செய்யப்படுகிறது.
இத்தொழில்களுக்கு கடன் தொகையில் 30 சதவீதம் மூலதன, 3 சதவீத வட்டி மானியமும் முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பில் விடுவிக்கப்படும். மேலும் சுயதொழிலில் ஈடுபடவும், தொழில் முனைவோர்களாக மாற பயிற்சி அளிக்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் சிவகங்கை மாவட்டத்தில் முன்னாள் படைவீரர்கள் அவர்தம் வாரிசுதாரருக்கு ரூ.3.43 கோடி மூலதனத்தில் தொழில் துவங்க வங்கி கடன் பெற்ற நிலையில், அவர்களுக்கு மூலதன மானியமாக ரூ.1.21 கோடி, வட்டி மானியம் வழங்கப் பட்டுள்ளது.