
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : சோழபுரம் அருள்மொழிநாதர் கோயிலில் உள்ள கவுரி பீடத்தில் ஆவணி அமாவாசையன்று வெள்ளி வாள் வைத்து வழிபாடு செய்தனர்.
சிவகங்கை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட சோழபுரம் அருள்மொழிநாதர் அறம்வளர்த்த நாயகி கோயில் வளாகத்தில், மன்னர்கள் பதவியேற்கும் கவுரி பீடம் உள்ளது. இந்த பீடத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி அமாவாசையன்று சிவகங்கை அரண்மனையில் உள்ள வெள்ளிவாளை வைத்து சிறப்பு வழிபாடு நடத்துவர். சிவகங்கை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் மதுராந்தகி நாச்சியார் தலைமை வகித்தார்.
மன்னர் பள்ளிகளின் செயலர் குமரகுரு, தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர்கள் சேவற்கொடியோன், வேல்முருகன் பங்கேற்றனர். நேற்று மாலை கோயிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.