/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புத்துாரில் வெள்ளி வேல் அபிேஷகம்
/
திருப்புத்துாரில் வெள்ளி வேல் அபிேஷகம்
ADDED : ஜன 01, 2024 05:28 AM
திருப்புத்தூர்: திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு நேற்று சுப்பிரமணியருக்கும், வெள்ளிவேலுக்கும் அபிேஷக ஆராதனை நடந்தது.
குன்றக்குடி தேவஸ்தானத்திற்கு உட்பட்ட இக்கோயிலில் வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணியர் எழுந்தருளியுள்ளார்.
முருக பக்தர்கள் பழநி கோயிலுக்கு ஆண்டு தோறும் விரதம் இருந்து பாதயாத்திரை செல்வது வழக்கம்.
கார்த்திகை 1ல் விரதத்தை துவக்கி தைப்பூசத்திற்கு பழநி செல்கின்றனர். அதை முன்னிட்டு தைப்பூச விழா டிச.10 ல் முருகனுக்கு அபிேஷகத்துடன் துவங்கியது. டிச.24 ல் கார்த்திகை சிறப்பு அபிேஷகம் நடந்தது. நேற்று காலை 10:00 மணிக்கு மூலவருக்கும், வெள்ளி வேலுக்கும் சிறப்பு அபிேஷகம் நடந்தது. விபூதி காப்பு அலங்காரத்தில் சுவாமிக்கு தீபாராதனை காண்பித்தனர்.
இன்று சஷ்டியை முன்னிட்டு மாலை 6:00 மணிக்கு 108 சங்காபி ேஷகம் நடைபெறும். ஜன.12ல் திருவிளக்கு பூஜையும், ஜன.19ல் பாத யாத்திரையை துவக்குகின்றனர்.
ஜன.20 மாலை 6:00 மணிக்கு சிறப்பு பஞ்சாமிர்த அபிேஷகம், ஜன.25ல் தைப்பூச சிறப்பு அபிேஷகம் நடைபெறும். திருமுருக திருப்பேரவையினர் ஏற்பாட்டை செய்கின்றனர்.