/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிங்கம்புணரி -- மதுரை பஸ் வசதியின்றி அவதி
/
சிங்கம்புணரி -- மதுரை பஸ் வசதியின்றி அவதி
ADDED : ஜன 14, 2025 05:13 AM
சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் இருந்து மதுரை செல்ல கூடுதல் பேருந்துகள் இல்லாமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
சிங்கம்புணரி, சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த மக்கள் தொழில், வர்த்தக நிமித்தமாக மதுரையையே சார்ந்துள்ளனர். தினமும் இங்கிருந்து 1000க்கும் மேற்பட்டோர் மதுரைக்கு பேருந்துகளில் சென்று வருகின்றனர். 10க்கும் மேற்பட்ட அரசு, தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டாலும், குறிப்பிட்ட நேரங்களில் போதிய பஸ்கள் இல்லாததால் பயணிகள் அவதிப்படுகின்றனர்.
குறிப்பாக காலை 9:00- முதல் 10:00 மணி, 11:15-முதல் மதியம் 12:15 மணி, மாலை 5:30- முதல் 6:20 மணி நேரங்களில் மதுரை செல்ல பஸ்கள் இயக்குவதில்லை. இதனால் பயணிகள் அருகே உள்ள கொட்டாம்பட்டி சென்று அங்கிருந்து வேறு பஸ்களில் மதுரை செல்ல வேண்டியுள்ளது.
இதனால் கூடுதல் செலவும், நேர விரயமும் ஏற்படுகிறது. மேலும் ஏற்கனவே சிங்கம்புணரி, மதுரை வழியாக இயக்கப்பட்ட பொன்னமராவதி - செங்கோட்டை, மதுரை-, சிதம்பரம் பஸ்களும் நிறுத்தப்பட்டு விட்டது. எனவே நிறுத்தப்பட்ட பஸ்களையும் இயக்க பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.