/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
குப்பை களமாகும் சிங்கம்புணரி பாலாற்றங்கரை
/
குப்பை களமாகும் சிங்கம்புணரி பாலாற்றங்கரை
ADDED : அக் 31, 2025 11:26 PM

சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே பாலாற்றங்கரையில் பொதுமக்கள் கொட்டும் குப்பை சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி அவ்வழியாக செல்வோருக்கு நோய் தொற்றை ஏற்படுத்துகிறது.
இப்பேரூராட்சி பகுதியில் இருந்து வேங்கைப்பட்டி செல்லும் சாலையில் பாலாற்று பாலம் அருகே பொதுமக்கள், கடைக்காரர்கள் குப்பை, இறைச்சிக் கழிவுகளை கொட்டுகின்றனர். பேரூராட்சி நிர்வாகம் குப்பை கொட்ட கூடாது என எச்சரித்தாலும், இரவு நேரங்களில் யாருக்கும் தெரியாமல் வந்து குப்பையை கொட்டிச் செல்கின்றனர்.
அப்பகுதியில் மலைபோல் குப்பை தேங்கி கிடப்பதுடன் பல நேரங்களில் நடுரோட்டுக்கு வந்துவிடுகிறது. மழைக்காலங்களில் கடுமையான துர்நாற்றம் வீசும் நிலையில் அவ்வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். ம.கோவில்பட்டி, வேங்கைபட்டி உள்ளிட்ட பகுதி மக்கள் அவ்வழியாக செல்லும்போது பல்வேறு நோய் தொற்றுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே பேரூராட்சி நிர்வாகம் அப்பகுதியில் குப்பைகளை கொட்டுவதை தடுத்து நிறுத்துவதுடன், மீறி குப்பை கொட்டுபவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

