/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிங்கம்புணரி சேவுகபெருமாள் கோயில் வைகாசி திருவிழா கொடியேற்றம்
/
சிங்கம்புணரி சேவுகபெருமாள் கோயில் வைகாசி திருவிழா கொடியேற்றம்
சிங்கம்புணரி சேவுகபெருமாள் கோயில் வைகாசி திருவிழா கொடியேற்றம்
சிங்கம்புணரி சேவுகபெருமாள் கோயில் வைகாசி திருவிழா கொடியேற்றம்
ADDED : ஜூன் 02, 2025 12:33 AM

சிங்கம்புணரி: சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் ஐயனார் கோயில் வைகாசி விசாக திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
சிவகங்கை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட இக்கோயிலில் மே 22 ல் கோயில் உற்சவ விநாயகர் கிராமத்தில் உள்ள சந்திவீரன் கூடத்தில் எழுந்தருளி காணிக்கை பெற்றார்.
பத்து நாட்கள் விநாயகருக்கு அங்கேயே அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. நேற்று காலை 10:30 மணிக்கு காணிக்கை பணத்துடன் விநாயகர் மீண்டும் கோயில் திரும்பியதைத் தொடர்ந்து திருவிழா தொடங்கியது. மதியம் 1:35 மணிக்கு சேவுகப்பெருமாள் ஐயனாருக்கு சிறப்பு அலங்காரம் செய்தனர்.
தொடர்ந்து மதியம் 1:45 மணிக்கு பிடாரியம்மன் சன்னதி கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. மதியம் 2:15 மணிக்கு சேவுகப்பெருமாள் ஐயனார் சன்னதி முன்பாக உள்ள பிரதான கொடிமரத்தில் கொடியேற்றி வைகாசி திருவிழாவை துவக்கினர். பாரம்பரிய முறைப்படி சிவாச்சாரியார்கள் ஏடுபடித்து ஐயனார் உட்பட பரிவார மூர்த்திகளுக்கு காப்பு கட்டினர். பத்து நாள் திருவிழாவை முன்னிட்டு தினமும் பகல், இரவில் சுவாமி திருவீதி உலமா நடைபெறும்.
ஜூன் 5ம் தேதி மாலை 6:00 மணிக்கு பூரணை, புட்கலை உடனான சேவுகப்பெருமாள் ஐயனாருக்கு திருக்கல்யாணம் நடக்கிறது.
ஜூன் 6ம் தேதி கழுவன் விரட்டு திருவிழா, ஜூன் 9ஆம் தேதி தேரோட்டம், ஜூன் 10ஆம் தேதி பூப்பல்லக்கு நடைபெறும். ஏற்பாடுகளை தேவஸ்தான நிர்வாகிகள், கிராமத்தார் செய்து வருகின்றனர்.