ADDED : ஜன 02, 2025 11:49 PM
சிங்கம்புணரி; சிங்கம்புணரி ஒன்றியக் குழு கூட்டம் சேர்மன் திவ்யா பிரபு தலைமையில் நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலகிருஷ்ணன், ராஜசேகரன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஒன்றிய குழுத் துணைத் தலைவர் சரண்யா ஸ்டாலின், கவுன்சிலர்கள், ரம்யா, உமா, சத்தியமூர்த்தி, உதயசூரியன், பெரியகருப்பி, சசிகுமார் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர். ஒன்றியக்குழு கூட்டத்தில் அரசின் பல்வேறு துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
பள்ளிக்கல்வித்துறை சார்பில் பங்கேற்ற அலுவலர்கள், தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் துப்புரவு பணியாளர்களாக பணிபுரிவோருக்கு ஏப்., மாதத்திற்கு பிறகு சம்பளம் வழங்கப்படவில்லை என்றும், சில பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களே தங்கள் சொந்த பணத்தை செலவு செய்து வருகின்றனர், எனவே உடனடியாக சம்பளத்தை விடுவிக்க வலியுறுத்தினர். விரைவில் சம்பளம் வழங்கப்படும் என்று ஆணையாளர் தெரிவித்தார்.

