/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
எஸ்.ஐ.ஆர். படிவங்கள் ஓட்டு சாவடியில் வழங்கலாம்
/
எஸ்.ஐ.ஆர். படிவங்கள் ஓட்டு சாவடியில் வழங்கலாம்
ADDED : நவ 23, 2025 04:06 AM
தேவகோட்டை: காரைக்குடி தொகுதிக்கு உட்பட்ட தேவகோட்டை நகராட்சி, தேவகோட்டை தாலுகாவில் வசிக்கும் வாக்காளர்களின் எஸ்.ஐ.ஆர். படிவங்கள் வீடு தோறும் வழங்கப்பட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை வழங்குவது தொடர்பாக வாக்காளர்கள் யாரிடம் கொடுப்பது என தடு மாறினர்.
தேவகோட்டை தாசில்தார் சேதுநம்பு கூறியது:
இன்று ஞாயிற்றுக் கிழமை (நவ.23.) வாக்காளர்கள் தாலுகா முழுவதும் அந்தந்த பகுதிகளில் அவர்களுக்குரிய ஓட்டு சாவடி மையங்களில் நடக்கும் சிறப்பு முகாமில் சம்பந்தப்பட்ட பி.எல்.ஓ. அலுவலர்களிடம் வழங்கலாம் எனவும், வாக்காளர்கள் இந்த வசதியை பயன்படுத்தி பூர்த்தி செய்யப்பட்டதை சரிபார்த்து வழங்கலாம் என தெரிவித்துள்ளார்.

