/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிறுகூடல்பட்டி சிவன் கோயில் கும்பாபிஷேக விழா
/
சிறுகூடல்பட்டி சிவன் கோயில் கும்பாபிஷேக விழா
ADDED : பிப் 04, 2025 05:13 AM
திருப்புத்துார்: திருப்புத்துார் அருகேயுள்ள சிறுகூடல்பட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர் நகரச்சிவன் கோயிலில் கும்பாபிேஷகம் நடந்தது.
இக்கோயிலில் கும்பாபிஷேகம் நடந்து 12 ஆண்டு பூர்த்தியானதை அடுத்து மீண்டும் திருப்பணிகள் நடந்தது. விமான, கோபுர, சன்னதிகள் பராமரிக்கப்பட்டன.
கோயில் குளத்தைச் சுற்றிலும் கிரிவலப்பாதை அமைக்கப்பட்டது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஜன.31ல் யாகசாலை பூஜைகள் துவங்கின. தொடர்ந்து ஐந்துகாலயாகசாலை பூஜைகள் நடந்தன.
நேற்று காலை 9:15 மணிக்கு ஆறாம் காலயாக பூஜை நடந்து பூர்ணாகுதி தீபாராதனை நடந்தது. பின்னர் சிவச்சார்யார்களால் யாகசாலையிலிருந்து கலசங்கள் புறப்பாடு ஆகி விமான, கோபுரங்களுக்கு சென்றன.
தொடர்ந்து காலை 10:15 மணிக்கு புனித நீரால் கலசங்களுக்கு கும்பாபிேஷகம் நடந்தது. பின்னர் மாலையில் சுவாமிக்கும் அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடந்தது.