sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

சிவகங்கை அலங்கார அன்னை சர்ச் தேர்பவனி

/

சிவகங்கை அலங்கார அன்னை சர்ச் தேர்பவனி

சிவகங்கை அலங்கார அன்னை சர்ச் தேர்பவனி

சிவகங்கை அலங்கார அன்னை சர்ச் தேர்பவனி


ADDED : ஆக 14, 2025 11:23 PM

Google News

ADDED : ஆக 14, 2025 11:23 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை,; சிவகங்கை அலங்கார அன்னை சர்ச் திருவிழாவையொட்டி தேர்பவனி நேற்று இரவு நடைபெற்றது.

இங்கு, ஆக., 6 ம் தேதி மாலை 6:05 மணிக்கு கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கியது. தினமும் மாலை 6:00 மணிக்கு சிறப்பு திருப்பலி நடைபெற்றது. ஆக., 10 ம் தேதி மாலை 6:00 மணிக்கு ஜஸ்டின் மகளிர் பள்ளியில் இருந்து திருப்பலியும், அதனை தொடர்ந்து சர்ச் நோக்கி நற்கருணை ஊர்வலம் சென்றனர்.

விழாவின் 9ம் நாளான நேற்று மாலை 5:30 மணிக்கு சிறப்பு திருப்பலி கருத்துக்கள் வாசிக்கப்பட்டன.

மாலை 6:00 மணிக்கு சிவகங்கை மறை மாவட்ட பிஷப் லுார்து ஆனந்தம் திருவிழா திருப்பலி நிறைவேற்றி தேர்பவனியை துவக்கி வைத்தார்.

இரவு 7:45 மணிக்கு சர்ச்சில் இருந்து தேர்பவனி புறப்பட்டு, மதுரை முக்கு, திருப்புத்துார் ரோடு, சத்தியமூர்த்தி தெரு, அரண்மனைவாசல், நேருபஜார் வழியாக மீண்டும் இரவு 9:50 மணிக்கு சர்ச்- அடைந்தது. பங்கு இறைமக்கள் அலங்கார அன்னையின் ஆராதனை பாடல்களை பாடி சென்றனர். பங்கு பாதிரியார்கள் ஜெபமாலை சுரேஷ், ஸ்டீபன் ஆகியோர் தலைமையில் பங்கு இறைமக்கள், சகோதரிகள் தேர்பவனியில் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us