/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கை மாவட்ட போலீசார் குழப்பம்
/
சிவகங்கை மாவட்ட போலீசார் குழப்பம்
ADDED : செப் 20, 2025 03:59 AM

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் பெரும்பாலும் நம்பர் பிளேட் இல்லாத டூவீலர்கள் அதிகரித்துள்ளதால் போலீசார் குழப்பமடைந்துள்ளனர்.
சிவகங்கை, காரைக்குடியில் வட்டார போக்குவரத்து அலுவலகம் செயல்படுகிறது. இங்கு ஆண்டுதோறும் 20 ஆயிரம் புதிய டூவீலர்களுக்கு ஆர்.சி., பதிவு செய்கின்றனர்.
இம்மாவட்ட அளவில் 3 லட்சம் டூவீலர்கள் ஓடுகின்றன. இவற்றில் அரசு விதிப்படி நம்பர் பிளேட் பொருத்தியிருக்க வேண்டும். அதே போன்று சாகசங்கள் செய்வதற்காக சைலன்சர்களை மாற்றம் செய்யக்கூடாது என்ற விதிகள் உள்ளன.
குறிப்பாக விபத்து காலங்களில் டூவீலரில் உள்ள எண்களை வைத்து தான், அதன் உரிமையாளர் விபரங்களை கண்டறிவார்கள்.
மேலும் விதிமீறி செல்லும் டூவீலர்கள் மீது போக்குவரத்து போலீசார் அபராதம் விதிக்க எண் அவசியமாகிறது. ஆனால், தற்போது சிவகங்கை, காரைக்குடி உட்பட முக்கிய நகரங்களில் ஓடும் டூவீலர்களில் விதிகளை மீறி நம்பர் பிளேட்களை சரியாக பொருத்தாமல் உள்ளனர்.
இது தவிர அதிக சப்தம் எழுப்பும் சைலன்சர்களை பொருத்தி மாலை மற்றும் இரவு நேரங்களில் பரமக்குடி - தஞ்சாவூர், திருச்சி - ராமேஸ்வரம் பைபாஸ் ரோடுகளில் டூவீலரில் இளைஞர்கள் சாகசம் செய்வது அதிகரித்துள்ளது.
ரோந்து போலீசார் இது போன்று சாகசம் செய்யும் இளைஞர்களை கண்டுபிடிக்காமல் இருக்க நம்பர் பிளேட் பொருத்துவதில்லை.
குறிப்பாக டூவீலரில் செல்லும் சிலர் தனியாக நடந்து சென்று பெண்களிடம் நகைகளை வழிப்பறி செய்து தப்பிக்கின்றனர்.
மாவட்ட அளவில் அங்கொன்றும், இங்கொன்றுமாக நடக்கும் டூவீலர் சாகசம், வழிப்பறி போன்ற குற்றச்சம்பவங்களை தடுக்க டூவீலர்களில் கட்டாயம் நம்பர் பிளேட் இருப்பதை போலீஸ் மற்றும் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.
டூவீலருக்குரூ.500 அபராதம் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கூறியதாவது: எந்த வாகனமாக இருந்தாலும், விதிப்படி தயாரித்த நம்பர் பிளேட் பொருத்த வேண்டும்.
டூவீலரில் நம்பர் பிளேட் இல்லாததை வாகன சோதனையில் பிடித்தால் முதலில் போக்குவரத்து விதி மீறல் பிரிவு 177ன் படி ரூ.500 அபராதம்.
அடுத்த முறை அதே டூவீலர் நம்பர் பிளேட் இன்றி பிடிபட்டால் ரூ.5,000 அபராதமும், டூவீலர் பறிமுதல் செய்யப்படும்.
வாகன சோதனையின் போது நம்பர் பிளேட் இல்லாத டூவீலர்களுக்கு போலீசார் அபராதம் விதிப்பது அதிகரிக்க வேண்டும் என்றனர்.