/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கை நகராட்சியில் மக்கள் குறை தீர்க்க அக்.28, 29ல் சிறப்பு கூட்டம் நடத்த முடிவு

ADDED : அக் 26, 2025 06:57 AM
சிவகங்கை: சிவகங்கை நகராட்சியில் மக்களுக்கு தேவையான அடிப்படை சேவைகளை செய்திட வார்டு வாரியாக சிறப்பு கூட்டங்கள் நடக்கிறது. அந்தந்த பகுதி மக்கள் கூட்டத்தில் பங்கேற்று தங்கள் பகுதி தேவைகளை தெரிவிக்கலாம் என நகராட்சி தலைவர் துரைஆனந்த் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: சிவகங்கை நகராட்சி சார்பில் நகர்ப்புற உள்ளாட்சிப் பகுதியில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் அடிப்படை சேவைகளை மேம்படுத்திட, கவுன்சிலர்கள் தலைமையில் பொதுமக்கள், குடியிருப்போர் நலச்சங்க பிரதிநிதிகள் பங்கேற்கும் வகையில் வார்டு அளவிலான சிறப்புக்கூட்டங்கள் நடக்க உள்ளது.
இந்த கூட்டங்களில் பொதுமக்கள் கலந்துகொண்டு தங்கள் பகுதியில் உள்ள குறைகளையும், தங்கள் பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகளையும் மனுவாக கொடுக்கலாம்.
1 முதல் 25 வார்டுகளுக்கு அக்.28ம் தேதியும், 26,27 வது வார்டுகளுக்கு அக்.29ஆம் தேதியும் காலை 11:00 மணி முதல் மதியம்3:00 மணி வரை அந்தந்த வார்டுகளில் நடைபெற உள்ளது.
கவுன்சிலர்கள் அனைவரும் தங்களது வார்டுகளில் சிறப்புக்கூட்டத்தை தலைமையேற்று நடத்த வேண்டும் என்றார்.