/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சென்னை காரைக்குடி பல்லவன் ரயிலை மானாமதுரை வரை நீட்டிப்பதில் இழுபறி சிவகங்கை மக்கள் தொடர்ந்து புறக்கணிப்பு
/
சென்னை காரைக்குடி பல்லவன் ரயிலை மானாமதுரை வரை நீட்டிப்பதில் இழுபறி சிவகங்கை மக்கள் தொடர்ந்து புறக்கணிப்பு
சென்னை காரைக்குடி பல்லவன் ரயிலை மானாமதுரை வரை நீட்டிப்பதில் இழுபறி சிவகங்கை மக்கள் தொடர்ந்து புறக்கணிப்பு
சென்னை காரைக்குடி பல்லவன் ரயிலை மானாமதுரை வரை நீட்டிப்பதில் இழுபறி சிவகங்கை மக்கள் தொடர்ந்து புறக்கணிப்பு
ADDED : மார் 20, 2025 06:09 AM

சிவகங்கை: சென்னை - காரைக்குடி இடையே செல்லும் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயிலை மானாமதுரை வரை நீட்டிக்கும் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
சென்னைக்கு அதிகளவில் ரயில் வசதி இல்லாத ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்ட மக்களின் தேவைக்காக இந்த வழித்தடத்தில் சென்னை - ராமேஸ்வரம் இடையே ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த வழித்தடத்தில் சென்னைக்கு பகல் நேர ரயில் இல்லாதது, இம்மூன்று மாவட்ட மக்களை அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது.
காரைக்குடியில் இருந்து - சென்னைக்கும், அங்கிருந்து காரைக்குடிக்கும் பகல் நேர எக்ஸ்பிரஸ் (பல்லவன்) ரயில் இயக்கப்பட்டு வருகிறது. தினமும் இயக்கப்படும் இந்த ரயில், சென்னையில் மதியம் 3:45 மணிக்கு புறப்பட்டு இரவு 11:25 மணிக்கு காரைக்குடி வந்து சேர்கிறது. காரைக்குடியில் தங்கும் இந்த ரயில் மறுநாள் காலை 5:40 மணிக்கு காரைக்குடியில் இருந்து மீண்டும் சென்னை புறப்பட்டு, மதியம் 12:15 மணிக்கு சென்னை சேர்கிறது.
இந்த பகல் நேர ரயில் போக்குவரத்து மூலம் அரசு அலுவலகம், வணிக நோக்கத்திற்காக சென்னை செல்லும் பயணிகள் அதிகளவில் இந்த ரயிலை பயன்படுத்தி வருகின்றனர். அதே நேரம் மாவட்ட தலைநகரான சிவகங்கை மற்றும் மானாமதுரை பயணிகளுக்கு இந்த ரயில் பயனின்றி போகிறது.
இதன் காரணமாக காரைக்குடியில் இருந்து சென்னைக்கு தினமும் இயக்கப்படும் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயிலை மானாமதுரை வரை நீட்டித்து, தினமும் காலை மானாமதுரையில் இருந்து சிவகங்கை, காரைக்குடியில் நின்று செல்வதன் மூலம் பயணிகள் அதிகளவில் பயன்பெறுவர். எனவே பல்லவன் ரயிலை மானாமதுரை வரை நீட்டிக்க வேண்டும் என்ற திட்டத்தை தொடர்ந்து தெற்கு ரயில்வே நிர்வாகம் கிடப்பில் போட்டு வருகிறது.
ரயில்வே வாரியம் கையில் முடிவு
ரயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது, பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயிலை மானாமதுரை வரை நீட்டிக்க வேண்டும் என தொடர்ந்து பயணிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் பார்லிமென்டில் கார்த்தி எம்.பி., இந்த ரயிலை மானாமதுரை வரை நீட்டிக்க வேண்டும் என பேசியுள்ளார். இவ் விஷயத்தில் ரயில்வே வாரியம் தான் முடிவு எடுக்க வேண்டும். அவர்களது முடிவுக்கு பின் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில் மானாமதுரை வரை நீட்டிக்க வாய்ப்பு உண்டு, என்றார்.