/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கை தபால் அலுவலகம் நாளை முதல் இடமாற்றம்
/
சிவகங்கை தபால் அலுவலகம் நாளை முதல் இடமாற்றம்
ADDED : நவ 02, 2025 06:06 AM
சிவகங்கை: சிவகங்கை நகரில் வாரச்சந்தை ரோட்டில் உள்ள சிவகங்கை தலைமை போஸ்ட் ஆபிஸ்,முத்துசாமி நகர் அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகம், சிவகங்கை கலெக்ட்ரேட் அஞ்சலக அலுவலக வளாகத்தில் உள்ள சிவகங்கை உபகோட்ட அஞ்சல் ஆய்வாளர் அலுவலகம் ஆகிய மூன்று அலுவலகங்களும் போதிய இடவசதி இல்லாமல் தனித்தனியாக இயங்கியது.
பொது மக்கள் மற்றும் ஊழியர்களின் எளிமையான பயன்பாட்டிற்காக மூன்று அலுவலகங்களும் சிவகங்கை நகராட்சி அலுவலகம் எதிரில் தொண்டி ரோட்டில் மேம்பாலத்தின் கீழ் பகுதிக்கு நாளை முதல் மாற்றப்படுகிறது.
இந்த மூன்று அலுவலகங்களும் புதிய முகவரியில் நாளை செயல்படும் என கோட்ட கண்காணிப்பாளர் மாரியப்பன் தெரிவித்துள்ளார்.

