/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கை, ராமநாதபுரத்தில் ஆவின் பால் தட்டுப்பாடு! வினியோகிக்க முடியாமல் திணறும் நிர்வாகம்
/
சிவகங்கை, ராமநாதபுரத்தில் ஆவின் பால் தட்டுப்பாடு! வினியோகிக்க முடியாமல் திணறும் நிர்வாகம்
சிவகங்கை, ராமநாதபுரத்தில் ஆவின் பால் தட்டுப்பாடு! வினியோகிக்க முடியாமல் திணறும் நிர்வாகம்
சிவகங்கை, ராமநாதபுரத்தில் ஆவின் பால் தட்டுப்பாடு! வினியோகிக்க முடியாமல் திணறும் நிர்வாகம்
ADDED : மார் 24, 2024 05:26 AM
சிவகங்கை : காரைக்குடி ஆவின் நிர்வாகம் ஆவின், தனியார் பால் பூத்களுக்கு தாமதமாகவும், குறைவாகவும் அனுப்புவதால் தட்டுப்பாடு நிலவுகிறது.
காரைக்குடி ஆவின் நிர்வாகத்தின் கீழ் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டத்தில் ஆவினின் கீழ் 70, தனியாரிடம் 333 பால் பூத்கள் செயல்படுகின்றன. இவர்கள் மூலம் தினமும் 200 மில்லி, அரை, ஒரு லிட்டர் பால் பாக்கெட் விற்பனைக்கு அனுப்புகின்றனர். தினமும் பால்பூத்களுக்கு விற்பனைக்காக 90 ஆயிரம் லிட்டர் வரை அனுப்புகின்றனர். ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் உள்ள பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் மூலம் பாலை பெற்று, குளிரூட்டும் நிலையங்களில் வைத்திருந்து, அங்கிருந்து காரைக்குடிக்கு அனுப்பி வருகின்றனர்.
தற்போது அனைத்து கோயில்களிலும் மாசி - பங்குனி திருவிழா நடப்பதால், பால் அபிேஷகம், பால்குடம் எடுப்பதற்காக பக்தர்கள் பால் வாங்குகின்றனர். ஆவின் நிர்வாகத்தால் பால் தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை. இதனால், தனியார் நிறுவன பாலை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.
ஆவினில் தற்போது தினமும் 90 ஆயிரம் லிட்டர் விற்பனைக்கு வருவதால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும், கடந்த 2018 -19 ம் ஆண்டில் காரைக்குடி ஆவினில் நாள் ஒன்றுக்கு 40 ஆயிரம் லிட்டர் மட்டுமே கொழுப்பு நீக்கி, உரிய பரிசோதனைக்கு பின் பாக்கெட்களில் நிரப்பும் அளவிற்கே இயந்திரம் உள்ளது. ஆனால், இந்த இயந்திரத்தில் ஒரே நாளில் 90 ஆயிரம் லிட்டர் வரை கொழுப்பு நீக்கி, பரிசோதனை செய்யும் பணிகளை செய்ய வேண்டி உள்ளதால், பால் உரிய தரமின்றி கோடை காலத்தில் எளிதில் கெட்டுவிடுவதாக புகார் எழுந்துள்ளது.
மேலும், தேவையான பால் விற்பனைக்கு அனுப்ப முடியாமல் காரைக்குடி ஆவின் நிர்வாகம் திணறி வருவதால், பாலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. காரைக்குடி ஆவின் பாலக அதிகாரி கூறியதாவது: இங்கு தினமும் 1 லட்சம் லிட்டர் பாலை கொழுப்பு நீக்கி, பாக்கெட்டில் நிரப்பும் இயந்திரம் பொருத்தும் பணி நடக்கிறது. விரைவில் இந்த இயந்திரம் துவக்கிய பின், தட்டுப்பாடின்றி கொள்முதல் செய்த பாலை கொழுப்பு நீக்கி, பாக்கெட்டில் நிரப்பி, உரியநேரத்திற்குள் ஏஜன்ட்களுக்கு வழங்கி, தட்டுப்பாட்டை தவிர்க்க உள்ளோம். //

