/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கை வட்டார போக்குவரத்து அலுவலகம் திணறுகிறது: ஆர்.டி.ஓ., பி.ஏ., ஆய்வாளர் இல்லை
/
சிவகங்கை வட்டார போக்குவரத்து அலுவலகம் திணறுகிறது: ஆர்.டி.ஓ., பி.ஏ., ஆய்வாளர் இல்லை
சிவகங்கை வட்டார போக்குவரத்து அலுவலகம் திணறுகிறது: ஆர்.டி.ஓ., பி.ஏ., ஆய்வாளர் இல்லை
சிவகங்கை வட்டார போக்குவரத்து அலுவலகம் திணறுகிறது: ஆர்.டி.ஓ., பி.ஏ., ஆய்வாளர் இல்லை
ADDED : ஏப் 10, 2025 05:56 AM

சிவகங்கை வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் கீழ் சிவகங்கை, இளையான்குடி, திருப்புவனம், காளையார்கோவில் ஆகிய தாலுகாவிற்கு உட்பட்ட வாகன ஓட்டிகள் புதிதாக லைசென்ஸ் கேட்டும், ஆர்.சி., புத்தகம் பெறவும் தினமும் பலர் விண்ணப்பிக்கின்றனர். நெடுஞ்சாலைகளில் நடக்கும் விபத்துக்கள் குறித்து சம்பவ இடத்தை பார்வையிட்டு, அந்த வாகனங்களுக்கு விபத்து சான்று வழங்க வேண்டும்.
இது மட்டுமின்றி தற்போது தமிழக அரசு செயல்படுத்த உள்ள மினி பஸ் திட்டம் 43 வழித்தடங்களில் முறையாக பஸ்களை இயக்குவதற்கான நடைமுறைகளை கண்காணித்தல் உட்பட ஏராளமான பணிகள் நடக்கிறது. சிவகங்கை வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் கீழ் ஆர்.டி.ஓ., தலைமையில் ஒரு பி.ஏ., இரண்டு வாகன போக்குவரத்து ஆய்வாளர்கள் பணியில் இருந்தால் மட்டுமே, தடையின்றி லைசென்ஸ், ஆர்.சி., வழங்க முடியும்.
இது தவிர கலெக்டர் நடத்தும் சாலை விபத்து குறித்த கூட்டத்தில் எடுக்கும் தீர்மானம் குறித்தும் விவாதிக்க முடியும். ஆனால், சிவகங்கை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக ஆர்.டி.ஓ., பி.ஏ., மற்றும் 2 மோட்டார் வாகன ஆய்வாளர் பணியிடம் காலியாக உள்ளன. இதனால், வட்டார போக்குவரத்து அலுவலர் ஒருவரே தினமும் காலை 8:30 மணிக்கு லைசென்ஸ், ஆர்.சி., விபத்து வாகனங்களை பார்வையிடும் பணிக்காக ஆர்.டி.ஓ., ஓடுதளத்திற்கு செல்ல வேண்டும்.
அங்கிருந்து அலுவலகம் திரும்ப மதியம் 12:00 மணி வரை ஆகிவிடுகிறது. அதற்கு பின் அலுவலகத்தில் நடைபெறும் பணிகளை கண்காணித்து, அதற்குரிய ஆவணங்களில் கையெழுத்திடுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும். வட்டார போக்குவரத்து அலுவலக பணிகள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளன. அரசு, இங்கு காலியாக உள்ள பணியிடங்களுக்குரிய அதிகாரிகளை விரைந்து நிரப்ப வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.