/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கை எஸ்.பி., சிவபிரசாத் நியமனம்; மானாமதுரை டி.எஸ்.பி., பார்த்திபன்

ADDED : ஜூலை 15, 2025 06:29 AM

திருப்புவனம்; சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் தனியார் நிறுவன காவலாளி அஜித்குமார் 29, நகை திருட்டு வழக்கில் போலீஸ் விசாரணையில் மரணமடைந்ததையடுத்து மானாமதுரை டி.எஸ்.பி., சண்முகசுந்தரம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். எஸ்.பி., ஆஷிஸ் ராவத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.
இந்நிலையில் காரைக்குடி டி.எஸ்.பி., பார்த்திபன் மானாமதுரை டி.எஸ்.பி.,யாக இடமாற்றம் செய்யப்பட்டார். எஸ்.பி., பொறுப்பை ராமநாதபுரம் எஸ்.பி., சந்தீஷ் கூடுதலாக கவனித்து வருகிறார்.இந்நிலையில் சிவகங்கை எஸ்.பி.,யாக சிவபிரசாத் நியமிக்கப்பட்டார். சிவபிரசாத் கர்நாடகா, பெங்களுருவை சேர்ந்தவர். 2016ல் ஐ.பி.எஸ்., தேர்ச்சி பெற்று விருதுநகர் ஏ.எஸ்.பி.,யாக பணியை துவங்கினார். பின் மதுரை, சென்னை வண்ணாரப்பேட்டை, அண்ணாநகரில் துணை கமிஷனராக பணியாற்றினார். பின் மதுரை, தேனி எஸ்.பி.,யாக பொறுப்பு வகித்தார்.