ADDED : ஜூலை 20, 2025 11:24 PM

சிவகங்கை: சிவகங்கை எஸ்.பி., யாக ஆர். சிவபிரசாத் நேற்று பொறுப்பேற்றார்.
திருப்புவனம் அருகே மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமாரை, தனிப்படை போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்று அடித்து கொலை செய்த சம்பவத்தை அடுத்து, எஸ்.பி., ஆஷிஷ்ராவத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டு, தற்போது சென்னை பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு எஸ்.பி.,யாக உள்ளார்.
சிவகங்கையில்  எஸ்.பி., பணியிடம் காலியாக இருந்ததால், தேனி எஸ்.பி., ஆர்.சிவபிரசாத்தை  சிவகங்கைக்கு மாறுதல் செய்தனர்.
இதையடுத்து நேற்று சிவகங்கை எஸ்.பி.,யாக பொறுப்பேற்றார். இவர் கர்நாடக மாநிலம், பெங்களூரூவை சேர்ந்தவர்.
2016ல் ஐ.பி.எஸ்., தேர்ச்சி பெற்று விருதுநகரில் உதவி எஸ்.பி., யாக பணியை துவக்கினார். மதுரை, சென்னை வண்ணாரப்பேட்டை, அண்ணாநகரில் துணை கமிஷனராக பணிபுரிந்தார். மதுரை, தேனி எஸ்.பி.,யாக இருந்துள்ளார்.

