/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கை-காரைக்குடிக்கு ஒரு முறை மட்டுமே பஸ்
/
சிவகங்கை-காரைக்குடிக்கு ஒரு முறை மட்டுமே பஸ்
ADDED : பிப் 10, 2024 04:49 AM
சிவகங்கை: சிவகங்கையில் இருந்து காரைக்குடி மற்றும் காரைக்குடியில் இருந்து சிவகங்கைக்கு இரவு நேர பஸ்களின்றி அரசு ஊழியர்கள், பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.
கார்த்தி எம்.பி., இரவு நேர பஸ் இயக்க வேண்டும் என அமைச்சர் சிவசங்கருக்கு கோரிக்கை வைத்தார்.
அவர் வைத்த கோரிக்கைக்காக நேற்று முன் தினம் முதல் காரைக்குடியில் இருந்து சிவகங்கைக்கு ஒரே ஒரு முறை மட்டுமே வந்து செல்லும் விதத்தில், பஸ் இயக்கப்படுகிறது. இந்த பஸ் தினமும் மாலை 5:25க்கு காரைக்குடியில் புறப்பட்டு, திருப்புத்துார், மதகுபட்டி வழியாக சிவகங்கைக்கு இரவு 7:25க்கு வந்து சேரும். சிவகங்கையில் மீண்டும் இரவு 7:30 க்கு புறப்படும் பஸ் காரைக்குடியில் இரவு 9:00 மணிக்கு சென்று சேரும்.
இந்த பஸ் தினமும் ஒரே ஒரு முறை தான் சிவகங்கை - காரைக்குடி இடையே இயக்கப்படும்.
மற்ற நேரங்களில் காரைக்குடி - ஏம்பல், ஏம்பலில் இருந்து மதுரைக்கு பகல் நேர பஸ்சாக இயக்கப்படும் என போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.