/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
காரைக்குடி அரசு ஐ.டி.ஐ., யில் இலவச பயிற்சி வகுப்புகள்
/
காரைக்குடி அரசு ஐ.டி.ஐ., யில் இலவச பயிற்சி வகுப்புகள்
காரைக்குடி அரசு ஐ.டி.ஐ., யில் இலவச பயிற்சி வகுப்புகள்
காரைக்குடி அரசு ஐ.டி.ஐ., யில் இலவச பயிற்சி வகுப்புகள்
ADDED : ஆக 11, 2011 10:54 PM
காரைக்குடி : காரைக்குடி அரசு ஐ.டி.ஐ., யில், வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு, 45 நாட்கள் இலவச பயிற்சி வகுப்புகள் துவங்கப்படவுள்ளதாக, முதல்வர் மணி தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: பத்தாம், பிளஸ் 2 தேர்ச்சி பெறாதவர்கள், 5, 8ம் வகுப்பு தேர்ச்சியடைந்தோர், தற்போது, 11 மற்றும் 12ம் வகுப்பு படிப்போர், தொழிற்சாலைகளில் வேலை செய்வோர் இந்த இலவச பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன்பெறலாம்.
டர்னர், பிட்டர், வெல்டர், எலக்ட்ரிக்கல் மற்றும் வீட்டு வயரிங் தொழில் பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது. தேர்ச்சி பெறுவோருக்கு மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படும். விபரங்களுக்கு 04565- 220447 என்ற எண்ணிலோ, அல்லது முதல்வரை நேரிலோ தொடர்பு கொள்ளலாம், என்றார்.