சிவகங்கை : சிவகங்கை கிளை எல்.ஐ.சி., முகவர் சங்க (லியாபி) 19வது ஆண்டுவிழா தலைவர் முத்துகிருஷ்ணன் என்ற பாபு தலைமையில் நடந்தது.
செயலாளர் எஸ்டி.செந்தில்குமரன் முன்னிலை வகித்தார். பொருளாளர் பாண்டி என்ற விநாயகபெருமாள் வரவேற்றார்.அகில இந்திய முகவர் சங்க (லியாபி) தலைவர் எச்.எம்.ஜெயின் சிறப்புரை ஆற்றினார். மதுரை கோட்ட தலைவர் மாசானம், செயலாளர் பரமசிவம், பொருளாளர் அண்ணாமலை, மாவட்ட தலைவர் மரியலூயிஸ் பங்கேற்றனர். வணிக வளம் குறித்து நாஞ்சில் சம்பத் பேசியதாவது: அடுத்தவர் வாழ்வை முன்னேற்றுவதற்காக பாடுபடுபவர்கள் எல்.ஐ.சி., முகவர்கள். திரும்ப, திரும்ப மனம் சோர்வடையாமல் முயற்சித்தால் வெற்றி பெறலாம்.உங்கள் உழைப்புக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கவில்லை. எத்தனை கம்பெனிகள் வந்தாலும், மக்கள் மத்தியில் எல்.ஐ.சி., மீது மட்டும் தான் நம்பகத்தன்மை உள்ளது. புதுப்புது லட்சியங்களோடு பயணித்தால் வானம் வசப்படும். இந்தவேலை சுதந்திரமான, யாருக்கும் கட்டுப்படாத வேலை. இவ்வாறு அவர் பேசினார். துணை தலைவர்கள் கிருஷ்ணன், செல்லபாண்டியன், துணை செயலாளர்கள் வலம்புரி, பாஸ்கரன், ராஜா, தலைமை நிலைய செயலாளர் லெட்சுமணன், வட்டார தலைவர்கள் பொன்னுச்சாமி, திருவள்ளுவன், கோபி, ஆதீஸ்வரன், தங்கமணி கலந்து கொண்டனர். வட்டார தலைவர் சேவியர் நன்றி கூறினார்.

