/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
வேட்பாளராகும் ஆசையில் வரி பாக்கி செலுத்துவதில் ஆர்வம்
/
வேட்பாளராகும் ஆசையில் வரி பாக்கி செலுத்துவதில் ஆர்வம்
வேட்பாளராகும் ஆசையில் வரி பாக்கி செலுத்துவதில் ஆர்வம்
வேட்பாளராகும் ஆசையில் வரி பாக்கி செலுத்துவதில் ஆர்வம்
ADDED : செப் 23, 2011 01:04 AM
காரைக்குடி : நகராட்சி தேர்தலில் போட்டியிட விரும்புவர்கள் தங்களது சொத்து மதிப்பை காட்டுவதற்கு முன், அதிகாரிகளிடம் வரிபாக்கி நிலுவையில்லா சான்று பெறுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
காரைக்குடி நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. தற்போது, பெண் (பொது) தலைவர் பதவி ஒதுக்கப்பட்டுள்ளதால் கட்சி சார்பில் பதவியை பிடிப்பதில் போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில், அ.தி.மு.க., சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ., கற்பகம் இளங்கோவை அக்கட்சி வேட்பாளராக அறிவித்துள்ளது. தி.மு.க., சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படலாம் என எதிர்பாக்கப்படுகிறது. உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் தங்களது சொத்து மதிப்பை காட்ட வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக, கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட விருப்பம் தெரிவிக்கும் பல்வேறு கட்சியினர் மற்றும் சுயேட்சையாக போட்டியிட விரும்புவர்கள் தங்களது அசையும், அசையா சொத்துக்களுக்கான வரிபாக்கி நிலுவை இல்லா சான்று பெற அதிகாரிகளிடம் மனு செய்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் நீண்ட நாட்கள் வரி பாக்கி செலுத்தாமல் 'டிமிக்கி' கொடுத்தவர்கள் கூட வேட்பாளராகும் ஆசையில் பணம் கட்டுவதை காண முடிந்தது. கவுன்சிலராகும் ஆசையில் இளைஞர்கள் அதிகம் பேர் தேர்தல் களத்தில் குதித்துள்ளனர்.