/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
காரைக்குடியில் ஓட்டுக்கு ஜவுளி "டோக்கன்' : வாக்காளர்களை கவர வேட்பாளர்கள் தாராளம்
/
காரைக்குடியில் ஓட்டுக்கு ஜவுளி "டோக்கன்' : வாக்காளர்களை கவர வேட்பாளர்கள் தாராளம்
காரைக்குடியில் ஓட்டுக்கு ஜவுளி "டோக்கன்' : வாக்காளர்களை கவர வேட்பாளர்கள் தாராளம்
காரைக்குடியில் ஓட்டுக்கு ஜவுளி "டோக்கன்' : வாக்காளர்களை கவர வேட்பாளர்கள் தாராளம்
ADDED : அக் 08, 2011 11:00 PM
காரைக்குடி : காரைக்குடியில் ஓட்டுக்களை கவர, தீபாவளியை முன்னிட்டு வாக்காளர்களுக்கு ஜவுளி கடையில் துணி எடுத்துக் கொள்ள 'டோக்கன்' வழங்கப்படுகிறது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகராட்சி தலைவர் பதவி, கவுன்சிலருக்கு மொத்தம் 221 பேர் போட்டியிடுகின்றனர்.இங்கு 'மும்முனை' போட்டி ஏற்பட்டுள்ளது. கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வேட்பாளர்கள் வீடு, வீடாக சென்று வாக்காளர்களை கவர, இலவசங்களை அள்ளி வீசி ஆதரவு திரட்டி வருகின்றனர். வார்டுகளில் வசிக்கும் மக்களுக்கு தற்போது பண பட்டுவாடாவுடன், தீபாவளியை முன்னிட்டு ஜவுளி கடையில் துணி எடுத்துக் கொள்ள 'டோக்கன்' வழங்கப்படுகிறது. குறிப்பாக, பெண்களை குறி வைத்து, குடும்பத்திற்கு ஏற்றாற்போல் ரூ.1000 முதல் 3000 வரை மதிப்புள்ள டோக்கன் வழங்கும் பணி ஜரூராக நடந்து வருகிறது.
*தேனியில் பணம் பட்டுவாடா: தேனி நகராட்சி 33 வது வார்டில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது. இதனால், எப்படியும் வெற்றி பெற வேண்டும் என வேட்பாளர்கள் பணத்தை வாரி இறைக்கின்றனர். ஒரு வேட்பாளர் ஓட்டுக்கு ஆயிரத்து 500 ரூபாய் பட்டுவாடா செய்து வருகிறார். இவ்வார்டில் உள்ள ஆயிரம் ஓட்டுக்கு, 15 லட்சம் ரூபாய் தர முடிவு செய்துள்ளாராம். மற்றொரு கட்சி வேட்பாளர் ஓட்டிற்கு தலா ஆயிரம் ரூபாய் கொடுத்து வருகிறார். மற்ற வேட்பாளர்களும் பணம் தர திட்டமிட்டுள்ளனர்.
* உத்தமபாளையத்தில் குங்குமசிமிழ்:தேனி மாவட்டம் உத்தமபாளையம் பேரூராட்சியில் ஷகிலாபானு (அ.தி.மு.க.,), மும்தாஜ்(தி.மு.க.,), மகரிபா(தே.மு.தி.க.,) போட்டியிடுகின்றனர். தலைவர் பதவியை தக்க வைக்க தி.மு.க.,வும், கைப்பற்ற அ.தி.மு.க.,மும் மும்முரமாக உள்ளது. 13 வது வார்டில் சுடுகாடு செல்லும் ரோட்டில் உள்ள குடியிருப்பு, உத்தியமலை பகுதியில் உள்ள வாக்காளர்களுக்கு நேற்றுமுன்தினம் இரவு அ.தி.மு.க., வினர் தேர்தல் பரிசாக வீட்டிற்கு தலா ஒரு காமாட்சி விளக்கு, ஒரு குங்குமச்சிமிழ் வழங்கினர். (மதிப்பு சுமார் 500 ரூபாய்). அ.தி.மு.க., விற்கு ஓட்டளிக்க கேட்டுக்கொண்டனர். வீடுதேடி வரும் காமாட்சி விளக்கையும், குங்குமச் சிமிழையும் வேண்டாம் என யாரும் கூறமாட்டார்கள் என்ற அடிப்படையில் இவற்றை வழங்கியதாக அ.தி.மு.க., பிரமுகர் ஒருவர் கூறினார்.

