sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 10, 2025 ,கார்த்திகை 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

ராம்நகரை தூய்மையாக்குவேன் சுயே., வேட்பாளர் சுப்பிரமணியன்

/

ராம்நகரை தூய்மையாக்குவேன் சுயே., வேட்பாளர் சுப்பிரமணியன்

ராம்நகரை தூய்மையாக்குவேன் சுயே., வேட்பாளர் சுப்பிரமணியன்

ராம்நகரை தூய்மையாக்குவேன் சுயே., வேட்பாளர் சுப்பிரமணியன்


ADDED : அக் 08, 2011 11:00 PM

Google News

ADDED : அக் 08, 2011 11:00 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேவகோட்டை : தேவகோட்டை ராம்நகர் அடங்கிய முதல் வார்டில் நாச்சி பர்னிச்சர் நிறுவன உரிமையாளர் சுப்பிரமணியன் சுயேச்சையாக போட்டியிடுகிறார்.

பிரச்சாரம் செய்து அவர் பேசியதாவது: ஆர்.டி.ஓ. அலுவலகம்,கோர்ட் உட்பட 12 அரசு அலுவலகங்கள்,கல்லூரிகள் , மேல்நிலைப்பள்ளிகள் அடங்கியது நமது பகுதி. புதியதாக பல வீடுகள் உருவானாலும் அடிப்படை வசதிகள் இல்லை. நகராட்சிக்கு அதிக வருமானம் கிடைக்கும் பகுதி இப்பகுதி. என்றாலும் குடிநீர்.தெருவிளக்கு தேவை முழுமைபெறவில்லை. வேலைக்கு செல்வோர், அலுவலகங்களுக்கு வருவோர் கண்ட இடங்களில் வாகனங்களை நிறுத்துவதால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. நகரில் திருட்டு பயமும் உள்ளதால் தேவகோட்டை பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ளது போல் வாகனங்கள் நிறுத்தும் நிலையம் உருவாக்கப்படும். பழைய தெருவிளக்குகளை முறைபடுத்தி மேலும் எல்லா பகுதிகளுக்கும் குடிநீர்,தெருவிளக்கு,சாலை வசதி செய்யப்படும். சிவகங்கை ராஜா ரோட்டிலிருந்து கிறிஸ்துவ ஆலயம் முன்புறமாக செல்லும் பாதை சீர் செய்து தார்ரோடு போடப்படும். குறைகள் கேட்டறிந்து உடனுக்குடன் நிவரத்தி செய்ய குழு அமைத்து மாதம் ஒரு முறை குறை தீர்க்கும்நாள் நடத்தப்படும். மொத்தத்தில் ராம்நகர் தூய்மை நகராக மாற்ற அனைத்து நடவடிக்கைகளும் செய்யப்படும்.தென்னை மரத்தில் உள்ள அனைத்து பொருட்களும் பலவழிகளில் மனித வாழ்க்கைக்கு உதவுவதை போல ராம்நகரின் வளர்ச்சிக்கு தானும் பாடுபடுவேன் என்றார்.










      Dinamalar
      Follow us