/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ஆதரவற்றவர்களுக்கு சேவை: ஊராட்சி வேட்பாளர் உறுதி
/
ஆதரவற்றவர்களுக்கு சேவை: ஊராட்சி வேட்பாளர் உறுதி
ADDED : அக் 08, 2011 11:14 PM
காளையார்கோவில் : காளையார்கோவில் ஊராட்சி தலைவர் பதவி வேட்பாளர் அருள்ராஜ் பிரச்சாரத்தில்பேசியதாவது: 15 ஆண்டுகளாக தொடர்ந்து தலைவராக இருந்தவர் மக்களின் அடிப்படை தேவைகளை செய்ய தவறி விட்டார்.
அனைத்து தரப்பு மக்களுக்கும் அடிப்படை வசதிகள் கிடைக்க நடவடிக்கை எடுப்பேன். சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து ஊராட்சி வருமானத்தை பெருக்குவேன். முதியவர் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு செய்யும் மனித சேவை தெய்வ சேவை என்ற சிந்தனையோடு பணி செய்வேன்.திறந்த வெளிக் கழிப்பறையாக மாறிவரும் தெப்பக்குளத்தினை தூய்மையாக்கவும், பொதுமக்கள் பயன் பெறும் வகையில் இலவச கழிப்பறை அமைப்பேன். சுகாதாரமற்ற பஸ்டாண்ட் கழிப்பறையை நவீன மயமாக்குவேன். அனைத்து தெருக்களிலும் குப்பை தொட்டி அமைக்கவும், சேகரித்த குப்பைகளை அன்றைய தினமே அகற்றி குப்பைகள் இல்லாத சுகாதாரமான ஊராட்சியாக மாற்ற பாடுபடுவேன். மாந்தாளி, திருநகர், சோமசுந்தர நகரில் நீண்ட நாட்களாக இருந்து வரும் குறைந்த மின்அழுத்தம் பிரச்னைக்கு தீர்வு காண்பேன்.மக்கள் பிரச்னை குறித்து நேரிலோ, தொலைபேசியிலோ தெரியப்படுத்தியவுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அணுகி தீர்வு காணப்படும். மக்கள் குறைகளை களைவதற்காக ஊராட்சியில் மாதாந்திரகூட்டம் நடத்தி வெளிப்படையான நிர்வாகம் நடத்துவேன். என்றார்.

