/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருவெற்றிநாதர் கோயில் திருப்பணி துவக்கம்
/
திருவெற்றிநாதர் கோயில் திருப்பணி துவக்கம்
ADDED : செப் 04, 2011 10:49 PM
திருப்புத்தூர்:திருப்புத்தூர் ஒன்றியம் காரையூர் திருவெற்றிநாதர்
-புவனேஸ்வரி அம்மன்கோயில் புதுப்பிக்கும் பணி துவங்கியது.இக்கோயில் சுமார்
ஆயிரம் ஆண்டு காலத்திற்கும் முந்தையது. அழகான வேலைப்பாடுகளுடைய இக்கோயில்
பல நூற்றாண்டுகளாக சிதிலமடைந்து திருப்பணி நடைபெறாமல் இருந்தது.
இந்நிலையில் ஓராண்டிற்கு முன்பு இந்து அறநிலையத்துறை சார்பில்
திருப்பணிக்கு ரூ.28 லட்சம் அனுமதிக்கப்பட்டது.கோயில் இடிபாடுகளை அகற்றும்
பணி நேற்று முன் தினம் துவங்கியது.இணை இணையர் சாமிநாதன், உதவிஆணையர்
ராஜமாணிக்கம்,ஆய்வாளர் காத்தமுத்து, தக்கார் ராஜேஷ்கண்ணா, உபகோட்டப்
பொறியாளர் சுப்பிரமணியன் பங்கேற்றனர். சுவாமி கர்ப்பகிரகம்,அர்த்த மண்டபம்,
அம்பாள் கர்ப்ப கிரகம், அர்த்த மண்டபம் மற்றும் முன் மண்டபம்
புதுப்பிக்கப்பட உள்ளன.