/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு தேர்தல் கமிஷன் கட்டுப்பாடு
/
ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு தேர்தல் கமிஷன் கட்டுப்பாடு
ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு தேர்தல் கமிஷன் கட்டுப்பாடு
ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு தேர்தல் கமிஷன் கட்டுப்பாடு
ADDED : செப் 13, 2011 10:11 PM
சிவகங்கை : தேர்தல் பணியாற்றும் ஓட்டுச்சாவடி அலுவலர்கள் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை, தேர்தல் கமிஷன் கையேடாக வழங்கியுள்ளது.வாக்காளர் பதிவு, பெயர் மாற்றம், தகுதி நீக்கம், முகவரி மாற்றம், தொகுதி மாற்றம் உள்ளிட்ட மனுக்கள் மீது விசாரணை செய்யும் ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு, தேர்தல் கமிஷன் பயிற்சி அளிக்கிறது.
இந்த பயிற்சியில் வாக்காளர்களிடம் இருந்து பெறப்படும் மனுக்கள் மீது என்னென்ன நடவடிக்கை எடுக்க வேண்டும், மனுக்கள் பரிசீலனையின் போது கையாள வேண்டிய முறை, விசாரணைக்கு செல்லும் போது கேட்க வேண்டிய கேள்வி, அலுவலக கையேடுகளில் பதிவு செய்ய வேண்டிய முறை, ஓட்டுச்சாவடி அலுவலர்களின் கடமை குறித்து பயிற்சியின் போது விளக்கப்படுகிறது. விசாரணைக்கு வாக்காளர்களிடம் செல்லும் போது பல்வேறு சந்தேகங்கள் ஏற்படுவதால், இப்பணிகளில் தாமதம் ஏற்படுவதாக, பணியாளர்கள் தேர்தல் கமிஷனிடம் புகார் தெரிவித்தனர். இப்பிரச்னையை தீர்க்க தேர்தல் கமிஷன் தற்போது கையேடு ஒன்றை வெளியிட்டுள்ளது.தேர்தல் பிரிவு அதிகாரி ஒருவர் கூறுகையில், '' ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கென தனி விதிமுறைகள் இல்லாததால், பலர் இப்பணிகளை முழு ஈடுபாட்டுடன் செய்வதில்லை. இது குறித்து விளக்கம் கேட்டால், பயிற்சி வகுப்பில் தெரிவித்தவை புரியவில்லை என கூறி விடுகின்றனர். இந்த குறைகளை தீர்க்கவும், ஓட்டுச்சாவடி அலுவலர்கள் கையாள வேண்டிய நெறிமுறைகளை கையேடாக வழங்க மாநிலம் முழுவதும் 56 ஆயிரம் பிரதிகள் அச்சிடப்பட்டு வினியோகிக்கப்படவுள்ளது, '' என்றார்.