/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கை மாவட்டத்தில் விவசாயம் தொடர்ந்து மழை பெய்வதால் மகிழ்ச்சி
/
சிவகங்கை மாவட்டத்தில் விவசாயம் தொடர்ந்து மழை பெய்வதால் மகிழ்ச்சி
சிவகங்கை மாவட்டத்தில் விவசாயம் தொடர்ந்து மழை பெய்வதால் மகிழ்ச்சி
சிவகங்கை மாவட்டத்தில் விவசாயம் தொடர்ந்து மழை பெய்வதால் மகிழ்ச்சி
ADDED : செப் 13, 2011 10:15 PM
காளையார்கோவில் : காளையார்கோவில் பகுதியில் நெல் சாகுபடி பணி நடந்து வருகிறது.சாகுபடிக்கு தேவையான இடுபொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
காளையார்கோயிலில் விவசாயம் முக்கிய தொழிலாக இருந்து வருகிறது. கண்மாய் பாசனங்களை நம்பி ஆண்டுக்கு ஒரு முறை நெல்சாகுபடி நடைபெறும். இந்த ஆண்டு பருவ மழை பரவலாக பொழிய துவங்கியதால் விவசாயிகளும் நிலங்களை உழவு செய்து வந்தனர். மழை தொடரும் என்ற நம்பிக்கையில் விவசாயிகளும் குறுகியகால பயிர்கள் விதைக்கும் பணியில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.கடந்த ஒரு வாரமாக இப்பணி தீவிரம் அடைந்து வருகிறது.காளையார்கோவில் ஒன்றியத்தில் 11 ஆயிரம் ஹெக்டருக்கு மேல் நெல் சாகுபடி நடைபெறுகிறது. இடுபொருள்கள் தடையின்றி கிடைக்க வேளாண்மைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.மறவமங்கலம் நீர்பாசன சங்க தலைவர் அண்ணாத்துரை கூறுகையில்,'' கடந்த ஆண்டு விவசாயிகள் நெல்சாகுபடிக்கு களை எடுப்பு பணி செய்து, பயிர் வளர்ச்சிக்கு உரம்,பூச்சிக்கொல்லி மருந்துகள் கிடைக்காமல் மகசூல் பாதிக்கப்பட்டது. சாகுபடிக்கு வாங்கிய கடனை கட்ட முடியாமல் விவசாயிகள் அவதிக்குள்ளாகினர். இந்தமுறை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு தேவையான உரம், பூச்சிக்கொல்லி மருந்து இருப்பு வைப்பதுடன், தனியார் கடைகளிலும் அரசு விலைக்கே கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். கூட்டுறவு வங்கி மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலும் விவசாயக்கடன் வழங்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்,''என்றார்.நேற்றுமுன்தினம் மாலை சிவகங்கை மாவட்டம் முழுவதும் பலத்த மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.