/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அ.தி.மு.க.,வில் கோஷ்டி பூசல் உச்சக்கட்டம் மாவட்ட நிர்வாகத்திடம் வேட்பாளர் புகார்
/
அ.தி.மு.க.,வில் கோஷ்டி பூசல் உச்சக்கட்டம் மாவட்ட நிர்வாகத்திடம் வேட்பாளர் புகார்
அ.தி.மு.க.,வில் கோஷ்டி பூசல் உச்சக்கட்டம் மாவட்ட நிர்வாகத்திடம் வேட்பாளர் புகார்
அ.தி.மு.க.,வில் கோஷ்டி பூசல் உச்சக்கட்டம் மாவட்ட நிர்வாகத்திடம் வேட்பாளர் புகார்
ADDED : அக் 07, 2011 10:52 PM
இளையான்குடி : இளையான்குடி பேரூராட்சி தலைவர் பதவிக்கு அ.தி.மு.க.,வில் சீட்டு கிடைக்காததால், சுயேச்சையாக நிற்கும் போட்டி வேட்பாளருக்கு ஆதரவாக, கட்சி நிர்வாகிகள் செயல்பகின்றனர், என அ.தி.மு.க.,வேட்பாளர் அன்வர் மாவட்ட செயலாளரிடம் புகார் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பேரூராட்சி தலைவர் பதவிக்கு, அ.தி.மு.க.,வில் நகர் செயலாளர் அன்வர் , நகர் அவைத்தலைவர் அப்துல் குலாம் , 16 வது வார்டு செயலாளர் அயூப் அலிகான் சீட்டு கேட்டிருந்தனர். அன்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதை எதிர்த்து அயூப் அலிகான் சுயேச்சையாக களத்தில் இறங்கியுள்ளார். போட்டி வேட்பாளர்களை வாபஸ் பெறக் கூறி மாவட்ட நிர்வாகிகள் வலியுறுத்தியும் பயனில்லை. உள்ளூர் நிர்வாகிகள் சிலர் தனக்கு வேலை செய்யாமல் சுயேச்சையாக நிற்கும் போட்டி வேட்பாளருக்கு வேலை செய்வதாக, மாவட்ட செயலாளர் முருகானந்தத்திடம் அன்வர் புகார் செய்துள்ளார். அ.தி.மு.க., வேட்பாளர் அன்வர் கூறுகையில் ''தலைமை என்னை வேட்பாளராக அறிவித்தது. நான் அனைத்து நிர்வாகிகளையும் சந்தித்து ஆதரவு கேட்டேன். சீட்டு கிடைக்காததால் அயூப் அலிகான் சுயேச்சையாக போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக அப்துல் குலாம் உட்பட 13 நிர்வாகிகள் செயல்படுகின்றனர். இது குறித்து மாவட்ட செயலாளர் முருகானந்தத்திடம் புகார் தெரிவித்துள்ளேன்,'' என்றார்.அப்துல் குலாம் கூறுகையில், ''நான் சுயேச்சையாக நிற்கும் அயூப் அலிகானுக்கு ஆதரவாக செயல்படவில்லை. அன்வர் என் மீது பொய்யான குற்றச்சாட்டை கூறுகிறார்'' என்றார். இளையான்குடியில் அ.தி.மு.க., வில் நடக்கும் உள்குத்து வேலைகளால், வார்டுகளில் உறுப்பினர் பதவிக்கு நிற்கும் வேட்பாளர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

