/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
நாறும் துாய்மை பணியாளர் குடியிருப்பு
/
நாறும் துாய்மை பணியாளர் குடியிருப்பு
ADDED : செப் 09, 2025 04:02 AM

காரைக்குடி: காரைக்குடி மாநகராட்சியில் உள்ள துாய்மை பணியாளர் குடியிருப்பு கே.எம்.சி., காலனியில் சுகாதார சீர்கேடு நிலவுவதோடு 5 ஆண்டுகளுக்கும் மேலாக குடிநீர் கிடைக்காமல் சிரமப்பட்டு வருகின்றனர்.
காரைக்குடி 27வது வார்டுக்குட்பட்ட கே.எம்.சி., காலனியில் 2013--14 மற்றும் 2015-16ம் ஆண்டு களில் ரூ.2 கோடியே 30 லட்சம் மதிப்பீட்டில் 10க்கும் மேற்பட்ட குடி யிருப்புகள் கட்டப்பட்டது. குடியிருப்பு மற்றும் சுற்றுப்பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் குடி யிருந்து வருகின்றனர்.
இங்கு பராமரிப்பு பணிகள் நடைபெறாமல், துர்நாற்றம் அடிப்பதோடு சுகாதாரக் கேடு நிலவுகிறது. கட்டடமும் சேத மடைந்து இடிந்துவருகிறது. இக்குடியிருப்புகளில் குடிநீர் குழாய் இணைப்பு இல்லை. மூன்று நாட் களுக்கு ஒரு முறை மட்டுமே வண்டிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்வதால் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர்.
அ.தி.மு.க., கவுன்சிலர் பிரகாஷ் கூறுகையில், குடியிருப்பு மற்றும் குடியிருப்பை சுற்றிலும் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் குடிநீர் கிடைக்காமல் சிரமப்படுகின்றனர். நகரை துாய்மையாக வைத்திருக்கும் துாய்மை பணியாளர் க ளுக்கு குடிநீர் வழங்காதது கவலை அளிக்கிறது.
3 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப் படுகிறது. அதிலும் ஒருநாள் வரவில்லை என்றால் ஒரு வாரத்திற்கு தண்ணீர் இல்லாமல் சிரமப்படுகின்றனர். இதுவரை இருந்த 4 மாநகராட்சி கமிஷனர்களிடம் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை.
அத்தியாவசிய தேவையான குடிநீரை முறையாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.