/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மீன்பிடி விழாவில் வலையில் மீன்களுடன் பாம்புகளும் சிக்கின
/
மீன்பிடி விழாவில் வலையில் மீன்களுடன் பாம்புகளும் சிக்கின
மீன்பிடி விழாவில் வலையில் மீன்களுடன் பாம்புகளும் சிக்கின
மீன்பிடி விழாவில் வலையில் மீன்களுடன் பாம்புகளும் சிக்கின
ADDED : ஜூலை 12, 2025 11:47 PM

திருப்புத்துார்: திருப்புத்துார் ஒன்றியம் திருக்கோஷ்டியூர் அருகே பிராமணக் கண்மாயில் நடந்த மீன்பிடித் திருவிழாவில் மீன்களுடன் பாம்புகளும் வலையில் சிக்கியதால் கிராமத்தினர் அதிர்ச்சிஅடைந்தனர்.
கோடை துவங்கியவுடன் நீர் வற்றிய கண்மாய்களில் 'அழி கண்மாய்' எனப்படும் மீன்பிடித் திருவிழா நடந்து வருகிறது.
நேற்று காலை 7:00 மணி அளவில் பிராமணக் கண்மாயில் கட்டணம் ஏதுமின்றி அனைவரையும் மீன்பிடிக்க அனுமதித்தனர். தகவலறிந்த சுற்று வட்டாரக் கிராமத்தினர் மட்டுமின்றி புதுக்கோட்டை, மதுரை, திண்டுக்கல் மாவட்டக் கிராமங்களில்இருந்தும் பலர் வந்துஇருந்தனர்.
ஊத்தா, கொசுவலை, மீன் பிடி வலை, அரி கூடை, கச்சா உள்ளிட்ட உபகரணங்களை வைத்து மீன் பிடிக்கத் துவங்கினர். சிறுவர்கள், பெண்கள் மற்றும் முதியவர்களும் ஆர்வமாக மீன்பிடிக்க இறங்கினர்.
தாமரை கொடிகள் நிறைந்த கண்மாய் என்பதால் சிரமத்தோடு மீன்பிடித்தவர்களுக்கு வலைகளில் மீன்களுடன் பாம்புகளும் சிக்கியதால் அதிர்ச்சியடைந்தனர். பாம்பு அதிகம் இருந்ததால் பலர் மீன்பிடிக்க கண்மாய்க்குள் இறங்கவில்லை.
இருப்பினும் தைரியமாக மீன் பிடித்தவர்களுக்கு ஜிலேபி, குரவை, விரா உள்ளிட்ட மீன்கள் சிறிதளவில் கிடைத்தன. எதிர்பார்த்த அளவில் மீன்கள் கிடைக்கவில்லை.

