ADDED : செப் 01, 2025 02:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இளையான்குடி: சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே நல் கிராமம் வெங்கடாச்சலம் -- கிருஷ்ணம்மாளின் மகன் குணசேகரன் 36, ராணுவத்தில் பணிபுரிந்தார். காஷ்மீர் எல்லையில் பணிபுரிந்த போது மூச்சு திணறல் ஏற்பட்டது.
அதனை தொடர்ந்து அவர் திருச்சி (ராணுவ டெரிடோரியல் யூனிட்) ராணுவ முகாமில் பணிபுரிந்தார். அங்கும் அவருக்கு மூச்சு திணறல் ஏற்படவே பெங்களூரூவில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ராணுவ வீரரின் உடலை, நேற்று சொந்த ஊரான நல்கிராமத்திற்கு எடுத்து வந்து, ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்தனர். இறந்த ராணுவீரரின் மனைவி காயத்ரி சென்னை ஆயுதப்படை போலீசாராக பணிபுரிகிறார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். நேற்று நடந்த நல்லடகத்தின் போது, ராணுவ மரியாதை வழங்கப்பட்டது.

