ADDED : அக் 31, 2025 11:39 PM
காரைக்குடி: சர்தார் வல்லபாய் பட்டேலின் 150 வது பிறந்த நாளை முன்னிட்டு காரைக்குடியில் ஒற்றுமை அணிவகுப்பு ஊர்வலம் நடந்தது.
மத்திய அரசின் இளைஞர் நலம் விளையாட்டு அமைச்சரகம், நேரு யுவகேந்திரா, அழகப்பா பல்கலை மற்றும் பல்வேறு நிறுவனங்கள் சார்பில் இந்த அணிவகுப்பு ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தை துணைவேந்தர் ஜி.ரவி, மாங்குடி எம்.எல்.ஏ., துவக்கி வைத்தனர்.
நேரு யுவகேந்திரா ஒருங்கிணைப்பாளர் பிரவீன் குமார் வரவேற்றார். அழகப்பா பல்கலை பதிவாளர் செந்தில்ராஜன், ஒருங்கிணைப்பாளர் சுகனேஸ்வரி உட்பட என்.சி.சி., சி.ஐ.எஸ்.எப்., பயிற்சி மைய வீரர்கள் பங்கேற்றனர்.
சிவகங்கை: சர்தார் வல்லபாய் பட்டேலின் 150 வது பிறந்த நாளை முன்னிட்டு ஒற்றுமை அணிவகுப்பு மெல்லோட்டம் இலுப்பக்குடியில் நடந்தது. இந்தோ திபெத் எல்லை போலீஸ் காவல்படை பயிற்சி மைய டி.ஐ.ஜி., ஜஸ்டின் ராபர்ட் தலைமை வகித்தார். பயிற்சி வீரர்கள் சுற்றுப்புற கிராமங்களில் மெல்லோட்டமாக சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

