/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தென் மாநில பல்கலை மகளிர் ஹாக்கிபோட்டி நடக்காமல் 280 பேர் பாதிப்பு
/
தென் மாநில பல்கலை மகளிர் ஹாக்கிபோட்டி நடக்காமல் 280 பேர் பாதிப்பு
தென் மாநில பல்கலை மகளிர் ஹாக்கிபோட்டி நடக்காமல் 280 பேர் பாதிப்பு
தென் மாநில பல்கலை மகளிர் ஹாக்கிபோட்டி நடக்காமல் 280 பேர் பாதிப்பு
ADDED : பிப் 01, 2024 02:20 AM
சிவகங்கை:
தென் மாநில பல்கலைகளுக்கு இடையேயான மகளிர் ஹாக்கி போட்டியை நடத்தாததால், படிவம் 3 சான்று கிடைக்காமல் தமிழகத்தில் 280 வீராங்கனைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி, தெலுங்கானா ஆகிய 6 மாநிலங்களில் உள்ள பல்கலை கழகத்தில் படிக்கும் ஹாக்கி வீரர், வீராங்கனைக்கு ஆண்டுதோறும் தென்மாநில பல்கலைகளுக்கு இடையேயான ஹாக்கி போட்டி ஏதாவது ஒரு பல்கலை சார்பில் நடத்தப்படும்.
சர்வதேச போட்டியில் வெற்றி பெறும் பல்கலை ஹாக்கி அணி வீரர், வீராங்கனைகளுக்கு சான்று 1, தேசிய அளவில் வென்றால் சான்று 2, பல்கலை அளவில் வென்றால் சான்று 3 வழங்கப்படுவது வழக்கம்.
இதன் மூலம் அவர்கள் மத்திய அரசு அலுவலகங்களில் 'சி' மற்றும் 'டி' பிரிவு வேலை, தமிழக அரசு வேலைகளில் விளையாட்டு வீரர் ஒதுக்கீடு 3 சதவீதம் பெற்று பயன்பெறுவர். இதற்காக பல்கலைகளில் தலா 18 வீரர், வீராங்கனைகளை உருவாக்கி வைத்துள்ளனர்.
இதன்படி தமிழக அளவில் பல்கலை அணியில் ஹாக்கி வீராங்கனைகள் 280 பேர் உள்ளனர். இந்த ஆண்டு (2023 - -24) தென்மாநில பல்கலைகளுக்கு இடையேயான ஆடவர் ஹாக்கி போட்டி திருச்சியில் நடத்தினர். ஆனால், மகளிர் ஹாக்கி போட்டியை நடத்தவில்லை.
பல்கலை ஹாக்கி வீராங்கனைகள் கூறியதாவது:
தென்மாநில பல்கலைகளுக்கு இடையேயான ஆடவர் ஹாக்கியில் வென்றவர்கள் மத்திய பிரதேசத்தில் நடக்கும் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க சென்று விட்டனர். ஆனால் மகளிர் அணிக்கான இப்போட்டியை நடத்தவில்லை. இதன் காரணமாக தமிழக அளவில் 280 வீராங்கனைகளுக்கு படிவம் 3 சான்று பெற முடியாமல் போனது, என்றனர்.