/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அடிக்கடி பழுதாகும் எஸ்.பி., பட்டினம் பஸ்
/
அடிக்கடி பழுதாகும் எஸ்.பி., பட்டினம் பஸ்
ADDED : ஜூன் 26, 2025 01:09 AM

காரைக்குடி: காரைக்குடி புது பஸ் ஸ்டாண்டிலிருந்து எஸ்.பி.,பட்டினத்திற்கு தினமும் காலை 8:10 மணிக்கு அரசு பஸ் இயக்கப்படுகிறது. இதில் வேலைக்குச் செல்வோர், பள்ளி கல்லுாரிகளுக்கு செல்லும் மாணவர்கள் என ஏராளமானோர் சென்று வருகின்றனர்.
இதே நேரத்தில் காரைக்குடி மற்றும் தேவகோட்டையில் இருந்து தனியார் பஸ்களும் இயக்கப்படுவதால், தனியார் பஸ்சுக்கு ஆதரவாக அரசு பஸ் முறையாக இயக்கப்படுவதில்லை என பயணிகள் குற்றச்சாட்டுகின்றனர்.
மேலும் குறிப்பிட்ட நேரத்தில் புறப்படாமல் தாமதமாக கிளம்புவதாக புகாரும் உள்ளது.
நேற்று காலை பயணிகள் பஸ்சில் ஏறி இருந்தனர். நீண்ட நேரமாகியும் எஸ்.பி. பட்டினம் பஸ் புறப்படவில்லை. பஸ் பழுதானதாக கூறியதால் பயணிகள் அவசர அவசரமாக இறங்கி வேறு பஸ்சில் சென்றனர்.
அடிக்கடி இது போன்று எஸ்.பி. பட்டினம் பஸ் பழுதாவதாகவும், தாமதமாக வருவதும் தொடர்கதையாகி வருவதாக பயணிகள் தெரிவிக்கின்றனர்.
அதிகாரிகள் கூறுகையில்: காலையில் பஸ் சரி செய்யப்பட்டு மீண்டும் அனுப்பப்பட்டது.
தொடர் புகார் காரணமாக, எஸ்.பி.பட்டினத்திற்கு வேறு ஒரு புதிய பஸ் இயக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தனியார் பஸ்சுக்காக இதுபோன்று நடைபெறவில்லை.
ஆனாலும், பயணிகளின் புகாரின் பேரில் விசாரணை செய்யப்படும்.