/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தபால் நிலையங்களில் விபத்து காப்பீடு சேர்க்கை சிறப்பு முகாம்
/
தபால் நிலையங்களில் விபத்து காப்பீடு சேர்க்கை சிறப்பு முகாம்
தபால் நிலையங்களில் விபத்து காப்பீடு சேர்க்கை சிறப்பு முகாம்
தபால் நிலையங்களில் விபத்து காப்பீடு சேர்க்கை சிறப்பு முகாம்
ADDED : ஜூலை 25, 2025 12:06 AM
சிவகங்கை; சிவகங்கை தபால் நிலையங்களில் விபத்து காப்பீடு திட்டத்தில் சேர சிறப்பு முகாம் நடைபெறும் என கோட்ட கண்காணிப்பாளர் எஸ்.மாரியப்பன் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: தபால் நிலையங்கள் தபால் சேவைகளை வழங்குவதோடு மட்டுமின்றி மக்களுக்கு நிதி சார்ந்த சேவைகளையும் எளிதாக்கும் மையமாக செயல்படுகிறது. சிவகங்கை தபால் நிலையங்களில் வியாழன், வெள்ளி தோறும் விபத்து காப்பீடு திட்டத்தின் அவசியம் குறித்து விழிப்புணர்வு வழங்கப்படும். இதற்காக சிறப்பு முகாம் நடத்தப்படும்.
இம்முகாமில் காப்பீடு திட்டத்தில் உள்ள சந்தேகங்களை கேட்டு அறியலாம். இதில் தனி நபர் விபத்து, மருத்துவ காப்பீடு ஆண்டுக்கு ரூ.500 முதல் 700 என குறைவான பிரீமியத்தில் ரூ.10 லட்சம் மற்றும் ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்து காப்பீடு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
இதில் ஆண்டுக்கு ஒரு முறை உடல் பரிசோதனை செய்யலாம், அலைபேசி மூலம் கணக்கில்லா மருத்துவ ஆலோசனை கிடைக்கும். விபத்தினால் மரணம், நிரந்தர முழு ஊனம், நிரந்தர பகுதி ஊனம் ஏற்பட்டவர்களின் குழந்தைகளின் கல்வி, திருமண செலவினங்களுக்காக காப்பீட்டு நிதி, விபத்தினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நாட்களுக்கு தினமும் அதிகபட்சம் ரூ.1000 வீதம் 15 நாட்களுக்கு வழங்கப்படும்.
டூவீலர் மற்றும் நான்கு சக்கர வாகன காப்பீடு ஆகியவையும் பதிவு செய்து தரப்படும். பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம், என்றார்.