ADDED : டிச 21, 2024 07:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிங்கம்புணரி : சிங்கம்புணரி அருகே கண்ணமங்கலப்பட்டி ஊராட்சியில் சமூக தணிக்கைக்கான சிறப்பு கிராம சபை கூட்டம் ஊராட்சி தலைவர் செம்மலர் சந்திரன் தலைமையில் நடந்தது.
துணைத் தலைவர் ஜெயசுந்தரி, சமூகத் தணிக்கை வட்டார வள அலுவலர் முருகானந்தம், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வி முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் 2023-- 24ம் நிதி ஆண்டில் நிறைவேற்றப்பட்ட தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், பிரதம மந்திரி ஊரக குடியிருப்பு திட்ட செயல்பாடு குறித்து தணிக்கை செய்யப்பட்டது. பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தில் உள்ள நிறை குறை பற்றியும் விவாதிக்கப்பட்டது. ஊராட்சி செயலர் ஆனந்தகுமார் நன்றி கூறினார்.