/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கொரோனா காலத்தில் போலி பில் போட்டு பிளீச்சிங் பவுடர், முகக்கவசம் வாங்கிய புகார் சிவகங்கையில் சிறப்பு அதிகாரி விசாரணை
/
கொரோனா காலத்தில் போலி பில் போட்டு பிளீச்சிங் பவுடர், முகக்கவசம் வாங்கிய புகார் சிவகங்கையில் சிறப்பு அதிகாரி விசாரணை
கொரோனா காலத்தில் போலி பில் போட்டு பிளீச்சிங் பவுடர், முகக்கவசம் வாங்கிய புகார் சிவகங்கையில் சிறப்பு அதிகாரி விசாரணை
கொரோனா காலத்தில் போலி பில் போட்டு பிளீச்சிங் பவுடர், முகக்கவசம் வாங்கிய புகார் சிவகங்கையில் சிறப்பு அதிகாரி விசாரணை
ADDED : செப் 13, 2025 02:12 AM

சிவகங்கை:கொரோனா காலத்தில் போலி பில் போட்டுபிளீச்சிங் பவுடர், முகக்கவசம் வாங்கியதாகஎழுந்த புகாரின் பேரில் சிவகங்கை நகராட்சியில், நகராட்சிகளின் சிறப்பு அதிகாரி சரவணன் விசாரணை மேற்கொண்டார்.
சிவகங்கை நகராட்சியில் (2021- 2022) கொரோனா காலத்தில் போலி பில் போட்டு பிளீச்சிங் பவுடர், முகக்கவசம் வாங்கியதாக புகார் எழுந்தது. நகரில் காலிமனையிட வரி, கட்டட வரியை முறையாக வசூலிக்காமல் அரசுக்கு பல லட்ச ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக அப்போதைய நகராட்சிகளின் கமிஷனர் பொன்னையாவிடம் புகார் அளித்தனர்.
சிவகங்கை நகராட்சியில் 2021 ஏப்., 1 முதல் 2022 மே 15 வரையிலான காலக்கட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட வரவு செலவு, வரி வசூல், சுகாதாரத்துறைக்கென வாங்கிய பொருட்கள் குறித்து தணிக்கை செய்து அறிக்கை வழங்க உத்தரவிட்டார்.
சிவகங்கை உள்ளாட்சி நிதி தணிக்கை உதவி இயக்குனர் செல்வி தலைமையில் ஆய்வாளர்கள் சுமதி, கண்ணன், மாதவன் ஆகியோர் சிறப்பு தணிக்கை செய்தனர்.
அதில் போலி பில் வைத்து பிளீச்சிங் பவுடர், முகக்கவசம் வாங்கியது, காலிமனையிட வரி, கட்டட வரிகளை வசூலிக்காமல், நகராட்சிக்கு நிதி இழப்பு ஏற்படுத்தியதாக அறிக்கை அளித்திருந்தனர்.
அக்கால கட்டத்தில் சிவகங்கை நகராட்சியில் பணியில் இருந்த கமிஷனர், மேலாளர், பொறியாளர், சுகாதார ஆய்வாளர் உட்பட 12 பேரிடம் விசாரணை நடத்த சிறப்பு தனி அதிகாரியாக சிவகாசி மாநகராட்சி கமிஷனர் சரவணனை அரசு நியமித்தது. நேற்று காலை 11:00 மணிக்கு சிவகங்கை நகராட்சிக்கு வந்த அவர், மாலை 6:00 மணி வரை கமிஷனர்,பொறியாளர், சுகாதார ஆய்வாளர், மேலாளர்களிடம் விசாரணை நடத்தினார்.
அவரது விசாரணை அறிக்கையின் முடிவில், தவறு செய்த கமிஷனர், மேலாளர், பொறியாளர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கையை நகராட்சிகளின் இயக்குனர் மேற்கொள்வார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
துறை ரீதியிலான விசாரணை சிறப்பு அதிகாரி கே.சரவணன் கூறியதாவது: சிவகங்கை நகராட்சி அலுவலகத்தில் இருந்து நகராட்சிகள் இயக்குனரின் 'வீடியோ கான்பிரன்சிங்' மீட்டிங்கில் பங்கேற்றேன்.
பின்னர் சிவகங்கையில் பணிபுரிந்த கமிஷனர், பொறியாளர், மேலாளரிடம் துறை ரீதியான விசாரணை மேற்கொண்டேன், என்றார்.