/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருக்கோஷ்டியூரில் சிறப்பு வழிபாடு
/
திருக்கோஷ்டியூரில் சிறப்பு வழிபாடு
ADDED : நவ 07, 2024 01:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோஷ்டியூர்: திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயிலில் மணவாளமாமுனிகளின் திருநட்சத்திரத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.
சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் நேற்று காலை 10:00 மணி அளவில் மணவாளமாமுனிகள் சன்னதிக்கு பெருமாள் தீர்த்தம், கடாரி ஆசி வழங்கப்பட்டது. தொடர்ந்து மணவாள மாமுனிகள் சுவாமி சன்னதிக்கு புறப்பாடாகியது. தொடர்ந்து மணவாள மாமுனிகள் திருநட்சத்திரத்தை முன்னிட்டு பெருமாள், தாயார், ஆண்டாள் மங்களாசாசனம் நடந்தது. பின்னர் முனிகள் புறப்பாடாகி தென்னமரத்து திருவீதி உலா நடந்தது.