ADDED : நவ 01, 2024 04:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை: தேவகோட்டையில் தீபாவளியை முன்னிட்டு அதிகாலையிலேயே கோயில்களில் சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று சிறப்பு பூஜைகள் நடந்தன. புத்தாடை அணிந்து கோவில்களுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.
சிலம்பணி சிதம்பர விநாயகர், மீனாட்சி சுந்தரேஸ்வரர், கிருஷ்ணன், கைலாசநாதர், சவுபாக்ய துர்க்கை அம்மன், புவனேஸ்வரி அம்மன், சுந்தர விநாயகர் கோயில்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.