ADDED : ஜன 02, 2025 05:02 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி: குன்றக்குடி மற்றும் காரைக்குடி கோயில்களில்  புத்தாண்டை முன்னிட்டு  சிறப்பு வழிபாடு நடந்தது.
குன்றக்குடி சண்முகநாதப் பெருமான் கோயிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்து  தரிசனம் செய்தனர்.
காரைக்குடி கொப்புடைய நாயகியம்மன், மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில், நகரச் சிவன் கோயில், டி.டி. நகர் விநாயகர் கோயில், செக்காலை நகரச் சிவன் கோயில், கண்டனுார் செல்லாயி அம்மன் கோயிலில், மாத்துார் பெரியநாயகி அம்பிகை உடனுறை ஐநூற்றீஸ்வரர் கோயில், சூடாமணிபுரம் ராகவேந்திரர் கோயில், செக்காலை சக்தி விநாயகர் கோயில் உட்பட அனைத்து கோயில்களிலும் அதிகாலை முதலே சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.

