sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு   கலெக்டர் பொற்கொடி தகவல்  

/

முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு   கலெக்டர் பொற்கொடி தகவல்  

முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு   கலெக்டர் பொற்கொடி தகவல்  

முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு   கலெக்டர் பொற்கொடி தகவல்  


ADDED : ஜூலை 20, 2025 11:21 PM

Google News

ADDED : ஜூலை 20, 2025 11:21 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: முதல்வர் கோப்பைக்கான மாவட்ட, மண்டல, மாநில விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க ஆக., 16 க்குள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் பொற்கொடி தெரிவித்தார்.

மாவட்ட, மண்டல, மாநில அளவிலான முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் ஆக.,22 முதல் செப்., 12 வரை 5 பிரிவுகளாக நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க விரும்பும் வீரர்கள் ஆக., 16 அன்று மாலை 6:00 மணிக்குள் https://cmtrophy.sdat.in மற்றும் https://sdat.tn.gov.in ஆகிய இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மாநில அளவில் ரூ.37 கோடி பரிசு தொகைக்கான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகளுக்கான முன்பதிவு துவங்கியுள்ளது.

இதில் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவிகள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் பங்கேற்கலாம்.இதில் 5 பிரிவுகளில் 25 வகையான மாவட்ட அளவில் விளையாட்டு போட்டி, 7 வகையிலான மண்டல அளவிலான போட்டி, 37 வகையிலான மாநில போட்டிகள் நடக்க உள்ளது.

இது குறித்த விபரங்களுக்கு சிவகங்கை மாவட்ட விளையாட்டு அரங்கம், ஆடுகளம் தகவல் மையத்தை 95140 00777 ல் தொடர்பு கொள்ளலாம், என்றார்.






      Dinamalar
      Follow us